Kalki 2898 A.D: கல்கி படத்துக்கு ரிவ்யூவ் சொன்ன அபிஷேக் பச்சான்.. என்ன சொல்லி இருக்காருனு பாருங்க!

மும்பை: இந்திய திரையுலமே தற்போது அதிகமாக பேசிவரும் படம் என்றால் அது கல்கி 2898 ஏ.டி படம் குறித்துதான். வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தனது 50வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக அதிகப்படியான பொருட்செலவில் படத்தினை உருவாக்க திட்டமிட்டு கல்கி 2898 ஏ.டி படத்தினை உருவாக்கியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கு சுமார் ரூ. 600 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும் சொல்லப்பட்டது. படம் வெளியான நான்கு நாட்களிலேயே 500 கோடிகளை வசூல் செய்து விட்டதாக படக்குழு அறிவித்தது. இதுமட்டும் இல்லாமல் படத்தின் ஓ.டி.டி உரிமம் ரூபாய் 175 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

Abhishek Bachchan Kalki 2898 A D Amitabh Bachchan 2898

இதனால் படம் இதுவரை வசூல் செய்ததைப் பார்க்கும்போது தயாரிப்பு நிறுவனம் செலவு செய்த தொகையை வசூல் செய்துவிட்டது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீஷா பாதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் என்றால் அது அமிதாப் பச்சனின் கதாபாத்திரம்தான். அமிதாப் பச்சன் திரையில் காட்டப்பட்டபோது எல்லாம் திரையரங்கில் கைத்தட்டல்கள் இருந்துகொண்டே இருந்தது.

Abhishek Bachchan Kalki 2898 A D Amitabh Bachchan 2898

ஏற்னகவே படம் பார்த்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள் படம் எப்படி உள்ளது என தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, நாகர்ஜுனா, ராஜமௌலி உள்ளிட்ட பலரும் படத்தினை பாராட்டினர். படக்குழுவும் பாராட்டிய திரைபிரபலங்களுக்கு நன்றி கூறி வருகின்றது.

Abhishek Bachchan Kalki 2898 A D Amitabh Bachchan 2898

அபிஷேக் பச்சன்: அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்து படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் கல்கி 2898 ஏ.டி படத்தினைப் பார்த்த நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Abhishek Bachchan Kalki 2898 A D Amitabh Bachchan 2898

அதில் கல்கி 2898 ஏ.டி படம் மிகச்சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிடும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் வாவ் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த பதிவினை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X