நான் சொன்னா சொன்னது தான்: மாமியாருக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்
Recommended Video

மும்பை: கெஞ்சி கெஞ்சி பார்த்து நடக்காததால் மாமியாருக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தாய் பிருந்தா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லா மெர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பிறகு பிருந்தா தனியாக தங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்த கட்டிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஐஸ்வர்யா
லா மெர் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து ஐஸ்வர்யா ராய் பதறியடித்துக் கொண்டு தனது கணவருடன் அங்கு சென்றார். இதையடுத்து அபிஷேக் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

வீடு
ஐஸ்வர்யா ராயின் தந்தை இறந்த பிறகு பிருந்தாவை தங்களுடன் வந்து வசிக்குமாறு ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

உத்தரவு
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து எங்கள் வீட்டில் தான் இனி நீங்கள் தங்குகிறீர்கள். இனி லா மெர் கட்டிடத்தில் தனியாக வசிக்கக் கூடாது என்று அபிஷேக் தனது மாமியாரிடம் கறாராக தெரிவித்துவிட்டாராம்.

ஆராத்யா
அபிஷேக்கின் முடிவால் ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அம்மா தங்களுடன் தங்கினால் மகள் ஆராத்யாவை அவர் பார்த்துக் கொள்வார் என்று நிம்மதி அடைந்துள்ளார்.

பேத்தி
ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவை மாமியார் ஜெயா பச்சன் அருகிலேயே விடமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிருந்தா அவர்களுடன் தங்குவதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











