முன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்
Recommended Video

மும்பை: சோனம் கபூரின் திருமண நிகழ்ச்சியில் சல்மான் கானை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் ஆதரவாக இருந்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டார். அபிஷேக்கும், சோனமும் சேர்ந்து படங்களில் நடித்துள்ளனர்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சல்மான் கானும் வந்திருந்தார்.

சல்மான்
தனது முன்னாள் காதலரான சல்மான் கானை பார்த்தும் பார்க்காதது போன்று ஐஸ்வர்யா ராய் இருந்தார். சல்மான் வந்த பிறகு ஐஸ்வர்யா அசவுகரியமாக உணர்ந்ததை அபிஷேக் புரிந்து கொண்டார்.

மனைவி
அபிஷேக் வேறு எங்கும் செல்லாமல் ஐஸ்வர்யா ராயுடனேயே இருந்தார். சல்மான் கான் மேடையில் ஏறியதும் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

கத்ரீனா
நடிகை கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான நடிகர் ரன்பிர் கபூர், ஆலியா பட்டுடன் வந்தார். ஆலியாவும், ரன்பிரும் காதலிப்பதாக பேசும் நிலையில் ஜோடியாக வந்தனர். ஆலியாவை பார்த்த கத்ரீனா அவர் அருகில் சென்று பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஷாருக்கான்
ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த சல்மான் கானும், ஷாருக்கானும் சோனம் கபூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சேர்ந்து டான்ஸ் ஆடியது அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது.


Click it and Unblock the Notifications











