இந்த வீட்டில் நாம தான் பவர்புல்… பக்கா பிளான் போட்ட பிரியங்கா !
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 3 போட்டியாளர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரியங்கா உள்பட 6 பேர் அதிக வாக்குகள் பெற்று எவிக்சனில் இருந்து தப்பித்து விடும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே குழப்பம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தொடர்ந்து 3வது நாளாக இன்று பஞ்சதந்திர டாஸ்க் நடந்து கொண்டு இருக்கிறது. நாணயத்தை திருடுவது , மறைத்து வைப்பது மீண்டும் அவர்களிடமிருந்து திருடுவது என பிக் பாஸ் வீடே ஒரே குழப்பமாக இருக்கு.

கதறி அழுத அக்ஷரா
நேற்றைய எபிசோடில் பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்கும் சண்டை நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்த அக்ஷராவை பிக் பாஸ் கன்வென்ஷன் ரூமிற்கு அழைக்கிறார். நான் செல்ஃபிஷா இருந்து இருக்கனும், இந்த வீட்டில் ஒருத்தர் கூட எனக்கு சப்போர்ட் பண்ணல, என்கிட்ட இருக்குற காயினை மட்டும் எடுக்கணும்னு சொல்றாங்க, யாருக்கும் என்னை பிடிக்கல என்று அழுகிறார். இதையடுத்து, அக்ஷராவை பிக் பாஸ் சமாதானப்படுத்தி அனுப்பிவைக்கிறார்.

பவர் புல் நாமதான்
இதையடுத்து, பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் மூவரும் கூட்டாக அமர்ந்து கொண்டு பெரிதாக திட்டம் தீட்டுகின்றனர். இதில் கேங் லீடர் போன்று அபிஷேக் பேசுகிறார். நாம டாப் 5க்கு போகுற வரை நிரூப் தான் எல்லா கேமிலையும் ஜெயிக்கனும் என்கிறார். உடனே பேசும் பிரியங்கா இந்த விளையாட்டோட கடைசியில இவங்க 3 பேரும் தான் பவர்புல் அப்படினு எல்லாரும் சொல்லனும்... இந்த மொத்த வீடும் நம்மக்கூட சேர்ந்துக்கனும் அதுபோதும் என்கிறார் பிரியங்கா.

நெகட்டிவ் கமெண்ட்ஸ்
இந்தபிக் பாஸ் வீட்டில் அபிஷேக்கும் பிரியங்காவும் பண்ற அலப்பறை தாங்க முடியல. இதனால், பிரியங்காவுக்கு எதிராக பல நெகட்டிவ் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.


Click it and Unblock the Notifications











