சிவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பிக் பாஸ் அபிஷேக் ராஜா 2வது மனைவி.. சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: பிரபல யூடியூபரும் பிக் பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா சமீபத்தில் தனது 2வது திருமணத்தை நடத்தி முடித்தார். முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில், மீண்டும் காதலில் விழுந்த அபிஷேக் ராஜா சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் இருவரும் ஜோடியாக பேட்டியளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவருடைய மனைவி சுவாதி தான் அபிஷேக் ராஜாவுக்காக காத்திருக்கவில்லை என்றும் சிவபெருமானுக்காக காத்திருந்ததாகவும் பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

யூடியூபில் சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா ஏகப்பட்ட படங்களுக்கு டீட்டெய்லான விமர்சனங்களை அளித்து பிரபலமான நிலையில், பிக் பாஸ் போட்டியாளராக மாறினார். அவரை விட அவர் மனைவி பேசுவதை கேட்டால் தலை சுற்றுகிறதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அபிஷேக் ராஜா காதல் திருமணம்: யூடியூப் விமர்சகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா, சுவாதி நாகராஜன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தினர். சுவாதி நாகராஜனுடன் திருமணத்துக்குப் பிறகு யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வருகிறார்.
முறிந்து போன திருமண வாழ்க்கை: ஏற்கனவே 2017ல் தீபா நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அபிஷேக் ராஜா. ஆனால், அந்த திருமணம் அவர்கள் இருவருக்குமே சரியாக அமையவில்லை. இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட சண்டைகள் வெடித்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில்: கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக அபிஷேக் ராஜா பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா பேசியதை எல்லாம் ரசிகர்கள் கிண்டல் செய்து அவரை வறுத்தெடுத்தனர். 2 வாரத்திலேயே ரசிகர்கள் ஆதரவு அளிக்காமல் வீட்டுக்கு அனுப்பிய நிலையில், மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே அவரை விஜய் டிவி கொண்டு வந்தது. ஆனால், அப்போதும் பிக் பாஸ் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.

சிவனுக்காக காத்திருந்தேன்: திருமணத்துக்கு பிறகு அபிஷேக் ராஜா மற்றும் அவரது மனைவி சுவாதி பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் அபிஷேக் ராஜாவுக்காக காத்திருக்கவில்லை என்றும் சிவனுக்காக காத்திருந்தேன். என் பாட்டி எனக்கு சொன்ன கதையில் இருந்து சிவனை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். அபிஷேக் என்னை சந்தித்த போது நான் தான் சிவன் எனக் கூறினார். மேலும், அவருடைய பெயர் அபிஷேக் ராஜா மட்டுமல்ல சிவராமகிருஷ்ண சுப்பிரமணி என சொன்னார். அதன் பின்னர் தான் அவரை காதலிக்கத் தொடங்கினேன் என சுவாதி பேசியுள்ளார்.
குவியும் ட்ரோல்கள்: இதுக்கு அபிஷேக் ராஜா பேசுவதே பரவாயில்லை போல என என்னம்மா இப்படி கிரிஞ்சா பேசுறீங்க என்றும் எல்லாமே உருட்டு என்றும் நெட்டிசன்கள் சுவாதியின் பேட்டிக்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஜாம் ஜாம் என திருமணம் செய்துக் கொண்ட அபிஷேக் ராஜா 'ஜாம் ஜாம்' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











