இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி ஆரவாரத்தில்…. அமுங்கிப்போன அபிஷேக் எவிக்ஷன்!
சென்னை : உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்-இந்தியா போட்டி என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதன் காரணமாகவே நேற்று ஒருநாள் மட்டும் ஊடகத்தின் டி.ஆர்.பி மதிப்பு எங்கோ சென்றுவிடும்.
இந்த உற்சாக மிகுதியால் நேற்றைய பிக் பாஸ் சீசனில் அபிஷேக்கின் எவிக்ஷன் அமுங்கிப் போச்சு என்றுத்தான் சொல்லவேண்டும்.

பாக், இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா இரண்டு நாட்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அவற்றை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் செய்ய முடிவு செய்தது. எதிர்பார்த்தபடியே இந்திய அணியின் கே. எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, சூர்ய குமார் யாதவ், பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாமி, பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களமிறங்கினார்கள்.

பாக் வெற்றி
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எதிர்பார்ப்பு
இப்படி பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் ஒரு புறம் பரபரப்பாக போய் கொண்டு இருக்க மறுபக்கம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சனிக்கிழமை கமல் போட்டியாளர்கள் அனைவரையும் சும்மா வெச்சி செய்தார். இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று கமல் என்ன பேசுவார், யாரை பாராட்டுவார்... யாரை திட்டுவார்.. யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ரிமோட் சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை சுவாரசியம் இருந்த போதும், நேற்று ஏராளமானோர் இந்தியா... பாகிஸ்தான் போட்டியை பார்த்துள்ளனர். கிரிக்கெட் பிரியர்களுக்கும்.. பிக் பாஸ் பிரியர்களுக்கு நேற்று நிச்சயம் ரிமோட் சண்டை நடந்து இருக்கும் என்று சொல்லலாம். இருப்பினும் அபிஷேக் நேற்று வெளியேற்றப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை, கிரிக்கெட் ஆரவாரத்தில் அபிஷேக்கிக் எவிக்ஷன் அமுங்கிப் போய்விட்டது..


Click it and Unblock the Notifications











