ஆளே டோட்டலா மாறி இருக்கிறாரே… பேச்சுக்கூட மாறிப்போச்சே… இதுவும் ஒரு ஸ்டேடர்ஜியா !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5ல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கும் அபிஷேக் ராஜா

டோட்டலா மாறி ரொம்ப அமைதியாக இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது சுவாரசியம் குறைந்துள்ளதால், அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.

சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டு மறுபடி வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷெக் ரீ என்ட்ரி

அபிஷெக் ரீ என்ட்ரி

லக்‌ஸுரி பட்ஜெட் டாஸ்க் பொருட்களை தேர்ந்தெடுக்கும் விதம் வித்யாசமாக நடைபெற்றது. இதில், தாய கட்டைகளை உருட்ட, அதில் வரும் நம்பர் படி பெரிய பெரிய அட்டை பெட்டிகளை திறக்க வேண்டும். தாமரையும் அக்‌ஷராவும் தாயத்தை உருட்ட, அண்ணாச்சி பெட்டிகளை ஓபன் செய்தார். அப்போது தான் அபிஷேக் ராஜா ரீ என்ட்ரி ஆனார்.

பிரியங்கா ஷாக்

பிரியங்கா ஷாக்

அபிஷேக்கை பார்த்ததும் பாவனி வேகமாக ஓடி கட்டி பிடித்தார். பிரியங்கா ஷாக்கில் அப்படியே நின்றார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் அபிஷேக்கை கட்டிப்பிடித்தனர். தாமரை மற்றும் நீரூப்பை கடமைக்கு அபி விசாரித்தது போல் இருந்தது. உண்மையில் அபியின் ரீ என்ட்ரி பாவனி மற்றும் பிரியங்காவுக்கு செம்ம ஹேப்பி. அதேபோல, அண்ணாச்சியும், ராஜூவும் பெரியதாக சந்தேஷப்பட்டது போல தெரியல என்னடா இவன் மறுபடியும் வந்துட்டான் என்பது போல பார்த்தனர்.

பாவ்னி நாணயம்

பாவ்னி நாணயம்

நண்பன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் ஆடிய பாவ்னி தன்னிடம் இருக்கும் நாணயத்தை அபிஷேக்கிடம் கொடுக்கிறார். முதலில் நாணயத்தை வாங்கிக் கொண்ட அபிஷேக் பிரியங்காவிடம் ஆலோசனை பெற்றுவிட்டு மீண்டும் வேண்டாம் நீயே வெச்சுக்கோ இந்த வாரம் நீ எலிமினேட் ஆகாமல் இருந்தா எனக்கு கொடு என்கிறார்.

அடக்கி வாசிக்கும் அபிஷேக்

அடக்கி வாசிக்கும் அபிஷேக்

வழக்கமாக பெண் போட்டியாளர்களை செல்லமாக அழைக்கிறேன் என்று வாடி... போடி என்றும் , வயதில் பெரியவர்களை வா.. போ என்றும் ஒருமையில் பேசி வந்த அபிஷேக், நேற்று பிரியங்காவுடம் பேசும் போது இல்லீங்க என்றும், சொல்லுங்க என்றும் பேசி வருகிறார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்கு ஸ்டேடர்ஜி என்ற பெயரில் நாம போட்ட ஆட்டம் தான் காரணம் என்பதை உணர்ந்து உள்ளதால் தற்போது வீட்டில் அடக்கிவாசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X