அபிஷேக் ராஜா அந்த விஷயத்தில் கோளாறு.. மாமனார் சொன்னதுமே மூஞ்சி மாறிடுச்சே.. மனைவி வேற கர்ப்பமாம்!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான அபிஷேக் ராஜா கடந்த ஜூன் மாதம் தான் யூடியூபர் சுவாதி நாகராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே அபிஷேக் ராஜாவுக்கு திருமணமான நிலையில், முதல் மனைவி விவாகரத்து பெற்று அவரை பிரிந்து விட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக அபிஷேக் ராஜா பங்கேற்றார். சினிமா விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா ஓபன் பண்ணா யூடியூப் சேனலில் பணியாற்றி வந்தார். 2வது திருமணம் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், அதற்குள் தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி விட்டேன் என்றும் பேட்டியளித்துள்ளார் அபிஷேக் ராஜா.

அபிஷேக் ராஜா அவரது மனைவி சுவாதியுடன் மாமனாரும் பேட்டியில் கலந்துக் கொண்ட நிலையில், மருமகன் எந்தவொரு விஷயத்தில் ரொம்பவே கோளாறு என்பது குறித்தும் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவரது ஆசை பற்றியும் போட்டு உடைத்துள்ளார்.
அபிஷேக் ராஜா மனைவி கர்ப்பம்: தமிழ் சினிமா விமர்சகராக பிரபலமான அபிஷேக் ராஜா தற்போது இயக்குநராக ஜாம் ஜாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். பட வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க திருமணம் ஆனதும் பண்ண வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்த நிலையில், அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய நிலையில், அதன் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் ராஜா வெளியிட்டுள்ளார்.
3 குழந்தை பெத்துக்கணும்: ஒரு குழந்தைக்கு மேல வளைகாப்பு செய்யமாட்டார்கள் என பொதுவாக சொல்கின்றனர் என்றும் நான் என் 3 குழந்தைக்கும் வளைகாப்பை ஜாம் ஜாம்னு நடந்துவேன் என்றும் அபிஷேக் ராஜா கூற, உங்களுடைய விருப்பம் என்ன? என்கிற கேள்விக்கு ஜாதகத்தில் 3 குழந்தைகள் என இருக்கிறது. எனக்கு பெண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பெற்றுக் கொள்வேன் என அவர் அபிஷேக் ராஜாவையே அலறவிடும் அளவுக்கு பேசியுள்ளார்.
அந்த விஷயத்தில் கோளாறு: தன்னுடைய மருமகன் அபிஷேக் ராஜா குறித்து பேசும் போது அவருடைய மாமனார் சட்டென என்னுடைய மருமகன் அபிஷேக் ராஜா பணம் செலவு செய்யும் விஷயத்தில் ரொம்பவே கோளாறு. அதை மட்டும் கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லா இருக்கும் என்று கூற, அபிஷேக் ராஜாவின் முகமே மாறிவிட்டது.
சீக்கிரமே குட்டி அபிஷேக்: தனக்கு முதலில் 2 மகன்கள் பிறப்பான் என்றும் அதன் பின்னர் 3வதாக மகள் பிறப்பாள் என்றும் அபிஷேக் ராஜா கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நபரை ஏன் உங்க பொண்ணுக்கு கட்டிக் கொடுக்கிறீங்க என்றெல்லாம் என் மாமனாரிடமே டைரக்ட்டாக கேட்டுவிட்டேன் என்றும் அபிஷேக் ராஜா அந்த பேட்டியில் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல் குழந்தை எப்படியும் ஆண் குழந்தை தான் என்று அபிஷேக் ராஜா அடித்துக் கூறுகையில் குட்டி அபிஷேக்கிற்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











