»   »  அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!

அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அபிஷேக் பச்சன் தான் தயாரித்து நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக போட மறுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் நடிப்பில் இந்த ஆண்டில் ஹவுஸ்ஃபுல் 3 படம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த ஆண்டு அவர் பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

படத்தை பன்ட்டி வாலியாவுடன் சேர்ந்து அபிஷேக் தயாரிக்கிறார்.

அபிஷேக்

அபிஷேக்

அபிஷேக் பச்சன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லெஃப்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தனது கணவர் தயாரிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஆசைப்பட்டுள்ளார். நம் கணவர் தானே வேண்டாம் என்றா சொல்லப் போகிறார் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் ஐஸ்.

வேண்டாம்

வேண்டாம்

ஐஸ்வர்யா ராயின் விருப்பத்தை ஏற்க அபிஷேக் பச்சன் மறுத்துவிட்டாராம். இளமையான நடிகையை தனக்கு ஹீரோயினாக்க விரும்புகிறாராம் அபிஷேக். ஐஸ் அபிஷேக்கை விட 3 வயது பெரியவர்.

நடிகை தேடல்

நடிகை தேடல்

தனக்கு ஏற்ற இளமையான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறாராம் அபிஷேக் பச்சன். அபிஷேக்கை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருக்கே ஐஸ்வர்யா ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Abhishek Bachchan has reportedly refused to book wife Aishwarya as his heroine in his home production Lefty and in search of a younger actress.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil