»   »  ஆராத்யாவால் ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா?

ஆராத்யாவால் ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குழந்தை ஆராத்யாவின் எதிர்காலம் குறித்து பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு என்று இந்தி செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். தந்தை அபிஷேக் பச்சனும் அப்படி தான்.

இந்நிலையில் ஆராத்யாவின் எதிர்காலம் குறித்து கணவன், மனைவி இடையே பிரச்சனை என செய்தி வெளியாகியுள்ளது.

நடிப்பு

நடிப்பு

ஆராத்யாவை குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகம் செய்ய தந்தை அபிஷேக் பச்சன் விரும்புவதாகவும், அதற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று இந்தி செய்தி இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

அபிஷேக்

அபிஷேக்

ஆராத்யா எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நான் முடிவு செய்ய மாட்டேன். என் மகளுக்கு எது விருப்பமோ அதையே அவர் செய்யட்டும் என்று அபிஷேக் முன்பு தெரிவித்திருந்தார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ஆராத்யாவை படப்பிடிப்புதளத்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்றாலும் ஆராத்யாவை கேரவனில் தான் அமர வைப்பார். தனது மகளை அவர் நடிகையாக்கிப் பார்க்க விரும்புவதாக இதுவரை தெரிவிக்கவில்லை.

அமிதாப்

அமிதாப்

தனது பேத்தி ஆராத்யாவின் செல்லக் குறும்புகள் குறித்து தாத்தா அமிதாப் பச்சன் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார். ஆராத்யா பார்க்க அமைதியாக இருந்தாலும் பேச்சில் கெட்டிக்காரியாம்.

English summary
We have come across a strange rumour that indicates all is not well between the power couple of the B-town, Aishwarya Rai and Abhishek Bachchan and the reason behind their rift is none other than their daughter, Aaradhya Bachchan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil