Just In
- 36 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 43 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 51 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அபிசரவணன் -அதிதி மேனன் திருமண விவகாரம்... வைரலாகும் புதிய வீடியோ!

சென்னை: நடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் திருமண வீடியோ வைரலாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகில் இரண்டு திருமணங்களைப் பற்றிய பேச்சு தான் பரபரப்பாக உள்ளது. ஒன்று ஆர்யா-சாயிஷா திருமணம். மற்றொன்று அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம். முன்னது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
இரண்டாவது திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதே கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

காதல் திருமணம்:
பட்டதாரி படத்தில் சேர்ந்து நடித்த போது அபி சரவணனும், அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடத்தல் புகார்:
கடந்த வாரத்தில் அபி சரவணனை சிலர் கடத்தி விட்டதாக அவரது தந்தை போலீசில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யாரும் தன்னைக் கடத்தவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.

போலீசில் புகார்:
இது ஒருபுறம் இருக்க, நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்தார். பதிவுத் திருமணம் நடைபெற்று விட்டதாக அபிசரவணன் போலி சான்றிதழைக் காட்டுவதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அபி சரவணன் நிவாரண பணத்தில் முறைகேடு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஆதாரத்துடன் மறுப்பு:
இதையடுத்து காவல் ஆணையரகத்தில் தன் மீதான புகாருக்கு நடிகர் அபி சரவணன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் அதிதிக்கும் நடந்த திருமணத்தின் போது அதிதியால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார். தமிழக அரசின் இணையதளத்தில் தாங்கள் இருவரும் தம்பதிகள் என பதிவு செய்யப்பட்ட ஆதாரத்தையும் அபி சரவணன் வழங்கினார்.

வைரல் வீடியோ:
இந்நிலையில், அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஒரு அறையில் தனிமையில் அதிதி மேனன் கழுத்தில் அபிசரவணன் தாலி கட்டுகிறார். இதனை செல்போனில் அவர்களே பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஸ்வாசம் வெற்றி.. தல-யைத் தொடர்ந்து தளபதியை இயக்கும் சிவா?