உடல்நலம் பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா - பண உதவி செய்து தீபாவளி பரிசு வழங்கிய அபி சரவணன்

Recommended Video

Paravai Muniyamma falls sick

சென்னை: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவை சந்தித்து உதவியுள்ளார் நடிகர் அபி சரவணன். தீபாவளி பண்டிகைக்கு தேவையான புது துணிமணிகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கிய அபி சரவணன் அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

நடிகர் அபி சரவணனை பொறுத்தவரை மழை, வெள்ள பதிப்பு, புயல் பாதிப்பு என இந்தியாவில் எங்கே பேரிடர் ஏற்பட்டாலும், அங்கே முதல் ஆளாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும் சளைத்தவர் அல்ல.

Abi Saravanan provided medical assistance to Paravai Muniyamma

கிராமப்புறங்களில் நடைபெற்ற வரும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே பாடப்பட்டு வரும் கும்மிப்பாட்டு முதல் நாட்டுப்புற பாடல்களை வரை அனைத்தையும், கேசட் எனப்படும் ஒலிநாடா வடிவில் அளித்தவர் பரவை முனியம்மா. இன்றைக்கும் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் இவருடைய கும்மி பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இவருடைய திறமையை கண்டுகொண்ட இயக்குநர் தரணி முதன் முதலாக தன்னுடைய தூள் திரைப்படத்தில் பாடி நடிக்க வாய்ப்பு வழங்கினார். தூள் படத்தில், மதுர வீரன் தானே இவன உசுப்பிவிட்டே வீனே, சிங்கம்போல நடந்து வர்றான் செல்ல பேராண்டி என தன்னுடைய கணீர் குரலில் பாடி நடித்து ஒரே பாடல் மூலம் புகழ் பெற்றார்.

அதன் பின்னர் கோவில், ஏய், காதல் சடுகுடு, வேங்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் அவரை பட்டதாரி திரைப்படத்தில் நடித்த நடிகர் அபி சரவணன் நேற்று பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Abi Saravanan provided medical assistance to Paravai Muniyamma

மேலும், அவருக்கு தீபாவளி பண்டிகைக்கு தேவையான புது துணிமணிகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கிய அபி சரவணன் அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

தீபாவளிக்கு முன்பே பரவை முனியம்மாவை சந்திப்பதற்காக மதுரைக்கு கிளம்பிய அபி சரவணன் திருச்சி அருகே குழந்தை சுஜித் வில்சன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் பதறிப்போய் திருச்சிக்கு கிளம்பிவிட்டார்.

சிறுவனை மீட்கும் வரை அங்கேயே இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்துள்ளார். சிறுவனின் நல்லடக்கத்தை முடித்த பின்னர் உடனடியாக மதுரைக்கு கிளம்பி வந்து பரவை முனியம்மாவை சந்தித்துள்ளார்.

Abi Saravanan provided medical assistance to Paravai Muniyamma

நடிகர் அபி சரவணனை பொறுத்தவரை மழை, வெள்ள பதிப்பு, புயல் பாதிப்பு என இந்தியாவில் எங்கே பேரிடர் ஏற்பட்டாலும், அங்கே முதல் ஆளாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும் சளைத்தவர் அல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X