ஹாட் லிப் கிஸ்.. இதுக்கு பெயர் தான் ஒர்க்கவுட்டா.. பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மும்பை: பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை அபிகைல் பாண்டே ஒர்க்கவுட் செய்யும் போது தனது காதலனுக்கு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
ஹம்சே ஹை லைஃப், கியா தில் மெயின் ஹை, ஜிந்தகி வின்ஸ், ஆர்யான் உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அபிகைல் பாண்டே.
இந்த லாக்டவுன் நேரத்தில் தனது காதலருடன் இணைந்து வித விதமான ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

டான்ஸ் ஜோடி
நம்ம ஊரில் ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போன்ற பல டான்ஸ் ரியாலிட்டி ஷோ நடைபெறுவது போல, இந்தியில் பிரபலமான நாச் பாலியே எனும் நடன ஷோவின் 8வது சீசனில் கலந்து கொண்ட அபிகைல் பாண்டே, தனது ஜோடியான சனம் ஜோஹரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் ரியாலிட்டி ஷோவிலேயே அறிவித்தனர்.

நிர்வாண யோகா
டிவி நடிகை, டான்ஸர் என கலக்கி வந்த நடிகை அபிகைல் பாண்டே, யோகா கலைகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வம் அவரை டாப்லெஸ் ஆக யோகா செய்வது நிர்வாணமாக செய்வது என அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று, பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

லிவ்விங் டுகெதர்
இந்த லாக்டவுன் நேரத்தை தனது காதலர் சனம் ஜோஹருடன் ஜாலியாக கழித்து வருகிறார் நடிகை அபிகைல் பாண்டே. இருவரும் வித விதமாக ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கும் ரசிகர்கள் நல்லா என்ஜாய் பண்றாங்கப்பா என கமெண்ட் செக்ஷனில் வயிறு எரிந்து வருகின்றனர்.

லிப் லாக்
இந்நிலையில், தற்போது அபிகைல் பாண்டே, வெளியிட்டுள்ள ஒர்க்கவுட் வீடியோவில், அவரது காதலர் சனம் ஜோஹர், கைகளை தரையில் ஊன்றி முழு உடலையும் மேலே தூக்கி நிறுத்தி யோகா செய்கிறார். கீழே படுத்துக் கொண்டிருக்கும் நடிகை அபிகைல் பாண்டே, காதலருக்கு ஹாட் லிப் கிஸ் அடிக்கிறார். அதே போல இவரும் யோகா செய்தபடியே காதலருக்கு கொடுக்கும் முத்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











