மீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக திரியும் பிரபல டிவி நடிகை!
மும்பை: பிரபல டிவி நடிகை லாக்டவுன் தளர்வு காரணமாக வெளியே வந்து மீண்டும் நிர்வாண யோகா செய்யும் போட்டோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
9எக்ஸ் தொலைக்காட்சியில் கடந்த 2007ம் ஆண்டு ஒளிபரப்பான கியா தில் மெயின் ஹை தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் அபிகைல் பாண்டே.
தனது காதலருடன் இந்த லாக்டவுனில் விதவிதமான யோகாக்களை செய்து அசத்தி வந்த இவர், தற்போது மேலாடை அணியாமல் யோகா செய்து ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.
View this post on InstagramDon't wish for things to get easy. Wish for yourself to get tougher 💪💪
A post shared by Abigail :)) (@abigail_pande) on
செக்ஸி பாடி
ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான நாச் பாலியே 8வது சீசனில் தனது காதலர் சனம் ஜோஹருடன் ஜோடி போட்டு டான்ஸ் ஆடி அசத்தினார். செக்ஸி பாடி கொண்ட அபிகைல் பாண்டேவின் நடனத்துக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில், சனம் ஜோஹருக்கும் அபிகைல் பாண்டேவுக்கும் நிச்சயம் ஆனது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
View this post on InstagramHandstands. With love. 🤸🤸💪💪❤️❤️
A post shared by Abigail :)) (@abigail_pande) on
முத்த யோகா
இந்த லாக்டவுனில் வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே வருங்கால கணவருடன் வாழ்க்கை நடத்தி வந்த அபிகைல் பாண்டே, அடிக்கடி இருவரும் இணைந்து வித்தியாசமான யோகா செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார். இருவரும் மாற்றி மாற்றி யோகா செய்தபடி கொடுத்த முத்த யோகா வீடியோ இளைஞர்களை சூடேற்றியது.

நிர்வாண யோகா
ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் முறையாக நிர்வாண யோகா செய்த புகைப்படத்தை பதிவிட்டு, பாலிவுட்டை அலறவிட்ட அபிகைல் பாண்டே, தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெட்ட வெளியில், மேலாடை அணியாமல் மொத்த முதுகும் தெரியும் படி நிர்வாண யோகா செய்து மிரட்டியுள்ளார்.
யோகா என்பது
யோகா என்பது நம் உடலை கட்டுப்படுத்தும் விஷயம் அல்ல, அது நம்மை சுதந்திரமாக்கும் விசயம் என அரை நிர்வாணமாக யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஒரு அடடே விளக்கமும் கொடுத்துள்ளார் அபிகைல் பாண்டே. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











