அறிவு இல்லை, ஃபேக், சகுனி.. முடி வெட்ட வைத்த அபிநய்.. அத்தனையும் கொட்டித் தீர்த்த நிரூப்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 சீசனிலேயே தற்போது கொடுக்கப்பட்டுள்ள கண்ணாடி டாஸ்க் தான் சூப்பரான ஒன்று என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிலும், பிக் பாஸ் பிரித்த ஜோடிகள் தான் சூப்பரோ சூப்பர். சண்டை புரமோக்களை எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரமே வேற லெவல் சண்டையாக இருக்கப் போகுது என்பது கூடுதல் என்டர்டெயின் மென்ட்டுக்கு கியாரண்டி.
கடந்த வாரத்தில் இருந்தே ஆரம்பித்த அபிநய் நிரூப் சண்டை இந்த வாரம் பற்றிக் கொண்டு எரிகிறது.

அகத்தை காட்டும் கண்ணாடி
முகத்தை காட்டும் கண்ணாடியா இல்லை அடுத்தவரின் அகத்தை காட்டும் கண்ணாடியா? இந்த கண்ணாடி டாஸ்க் என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. இதுவரை இந்த சீசனில் கொடுக்கப்பட்ட லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிலேயே சிறப்பான டாஸ்க் இதுதான் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சைக்கலாஜிக்கலா
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்டா இல்லை ஸ்க்ரிப்ட் இல்லையா என்பதை எல்லாம் தாண்டி இது ஒரு சைக்கலாஜிக்கல் ரியாலிட்டி ஷோவாகவே இருந்து வருகிறது. போட்டியாளர்களின் மன வலிமையை ஒரு பலூனை உடைக்க வைத்தும் தெரிந்து கொள்ளலாம் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

அபிநயின் கண்ணாடி
கண்ணாடி டாஸ்க்கில் அபிநயின் கண்ணாடியாக நிரூப் செயல்பட்டு வருகிறார். அபிநய் என்னவெல்லாம் செய்கிறாரோ அதை போலவே நிரூப்பும் செய்து கொண்டு வருவது ரசிகர்களை கொஞ்சம் இரிடேட் செய்தாலும் அதன் பிறகு இருவருக்கும் இடையே வெடித்த மோதல் எபிசோடை பரபரப்பாக்கியது.

ஹேர் கட் பிரச்சனை
புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு கொடுப்பதற்காக நிரூப் முடி வளர்த்து வரும் விஷயம் தெரிந்தும் அபிநய் வேண்டுமென்றே தான் ஹேர் கட் செய்கிறேன் என பாத்ரூம் ஏரியாவுக்கு செல்ல வேறு வழியின்றி நிரூப்பும் தனது முடியை கொஞ்சமாக வெட்ட நிரூப்பின் ஈகோவை மொத்தமாக தட்டி எழுப்பி விட்டார் அபிநய்

சகுனி மாமா
கண்ணாடியாக நின்று அபிநய் முன்பாக பேசிய நிரூப் தனது மனதில் தேக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த வெறுப்புகளையும் கொட்டித் தீர்த்து விட்டார். ஃபேக், சகுனி, அறிவு இல்லை என கிடைக்கிற இடங்களில் எல்லாம் அபிநயை கண்டபடி திட்டித் தீர்த்து விட்டார் நிரூப்.

அபிநய் அழுகை
நிரூப்பின் கையை பிடித்துக் கொண்டே கடைசி வரை அதனை விடாமல் அனைத்து வசைகளையும் கேட்டுக் கொண்டு இருந்த அபிநயின் கண்கள் தானாக அழ ஆரம்பித்து விட்டன. அக்ஷரா மற்றும் பிரியங்கா ஓடோடி வந்து அபிநயின் அழுகையை துடைத்தனர்.

வெடித்தது சண்டை
நிரூப் செய்தது சரியா? அபிநய் சீண்டியது முறையா? என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விவாதிக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையேயான சண்டை பிக் பாஸ் வீட்டில் வெறித்தனமாக இருந்தது. வேண்டும் என்றே என் ஈகோவை டச் பண்ணிட்ட உனக்கு கொஞ்சம் குட அறிவே இல்லை என நிரூப் வெளுத்த சகுனி என சொன்னதற்காக நிரூப்புக்கு டைஸ் எடுத்துக் கொடுத்து அபிநய் சென்றதெல்லாம் ரொம்ப டூமச்.


Click it and Unblock the Notifications











