ஒரு வழியா பாவனியை காதலிக்கும் சீன் வந்துடுச்சு.. அபிநய்க்கு ஒரே ஆனந்தம் தான்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் பாவனி மற்றும் அபிநய் காதலிப்பது போன்ற காட்சி ஒரு வழியாக இடம்பெற்றுள்ளது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே பாவனி மற்றும் அபிநய் இடையே லவ் டிராக் ஓட்ட முயற்சி செய்த பிக் பாஸ் குழுவுக்கு சனிக்கிழமை எபிசோடில் சரியான வேட்டை தான்.

பாவனியை ரொமான்ஸ் பண்ணுவது போல நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் அய்யய்யோ ஆனந்தமே என அபிநய் மனதுக்குள் பாட ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

60வது நாளில் தான்

60வது நாளில் தான்

பாவனியிடம் 60வது நாளில் தான் நட்பாக பேசி பழகவே ஆரம்பிச்சேன் என சமீபத்தில் அபிநய் சொன்ன பொய் தான் இந்த 2021ம் ஆண்டிலேயே சிறந்த பொய் என பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பாவனிக்கு பிக் பாஸ் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் அபிநய் போல்டாக பேசாமல் மழுப்பியபடி பேசியதே காரணம் எனக் கூறுகின்றனர்.

தொடர்ந்து எஸ்கேப்

தொடர்ந்து எஸ்கேப்

ஒவ்வொரு வாரமும் மற்றும் அபிநய் என அதிக வாக்குகளுடன் பிக் பாஸ் ஹவுஸ்மேட்களால் நாமினேட் செய்யப்பட்டு வந்தாலும் நெபோடிசம் காரணமாக தொடர்ந்து கடைசி நேரத்தில் அபிநய் காப்பாற்றப்பட்டு வருவதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அதை பிக் பாஸ் குழு கண்டுக்காமல் அபிநயை காப்பாற்றி வருகிறது.

பாவனி ரசிகர்கள்

பாவனி ரசிகர்கள்

அபிநயை தொடர்ந்து விஜய் டிவி காப்பாற்றி வருகிறதா? அல்லது பாவனி ஆர்மியினர் காப்பாற்றி வருகின்றனரா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்த வாரம் இமான் அண்ணாச்சியை வெளியேற்ற முடிவு கட்டி அபிநய்க்கு அதிகமான ஓட்டுக்களை போட்டதாக பல ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை எல்லாம் ஷேர் செய்திருந்தனர்.

காதல் காட்சி

காதல் காட்சி

பாவனிக்கும் அபிநய்க்கும் இடையே கிசுகிசுக்கள் எழுந்தது இந்த வாரம் மிகப்பெரிய பூகம்பத்தையே உருவாக்கியது. ஒரு புயலாகவே பாவனி மாறி ராஜுவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இந்நிலையில், சக்ரா கோல்ட் டாஸ்க்கில் அபிநய் உடனே இணைந்து காதல் காட்சியில் பாவனி நடித்திருந்தார்.

ஆனந்தத்தில் அபிநய்

ஆனந்தத்தில் அபிநய்

ஒரு வழியாக பாவனி உடன் லவ் பண்ணும் டிராமாவிலாவது நடித்து விட்டோமே என செம குஷியில் அபிநய் ஆனந்தமாக இப்போது தான் நடித்தார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நேரம் பாவனிக்கு ஜோடியாக அமீர் நடித்து இருந்தால் அபிநய் ரியாக்‌ஷனே வேற மாறி இருந்திருக்கும் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாவனியின் அப்பா

பாவனியின் அப்பா

பாவனி உடன் சண்டை சமாதானம் ஆன நிலையில், சக்ரா கோல்ட் நாடகத்தில் ராஜு பாவனியின் அப்பாவாக நடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரே ஒரு டீ அபிநய் போட்டுக் கொடுத்தார் என்பதற்காக அன்பு மகளை கட்டிக் கொடுக்கிறாரே என அந்த நாடகத்தையும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X