நல்லா அரசியல் பண்றாங்கப்பா.. வெற்றிக் கொடி கட்ட செம சண்டை.. தாமரையிடம் ஆவேசப்பட்ட அபிநய்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 66வது நாளுக்கான 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மக்களே இல்லாத பிக் பாஸ் வீட்டில் மூன்று கட்சிகளை ஆரம்பித்து யாருக்கு அரசியல் பண்றாங்க என்றே தெரியாமல் ஒரு டாஸ்க்கை பிக் பாஸ் டீம் கொடுத்துள்ளது.

பிசிக்கல் டாஸ்க் இல்லையா என கேட்டவர்களுக்கு அரசியல் மாநாடு டாஸ்க்கில் பிசிக்கல் டாஸ்க் வைத்து அடிதடி சண்டையை அரங்கேற்றி உள்ளனர்.

எல்லோருமே அரசியல்வாதிகள்

எல்லோருமே அரசியல்வாதிகள்

நியூஸ் டாஸ்க்கிலாவது ஒரே ஒரு ஆடியன்ஸ் மார்க் போட்டார். ஆனால், இந்த வாரம் அரசியல் டாஸ்க் என வைத்து 3 காட்சிகளில் 4 பேர் என அனைவரையுமே அரசியல்வாதிகள் ஆக்கி வீட்டில் மிகப்பெரிய சண்டைக்கு தீனிப் போட பிளான் பண்ணி விட்டது பிக்பாஸ் குழு. மக்களே இல்லாத வீட்டில் எதற்கு இத்தனை கட்சிகள்? யார் ஓட்டுப் போடுவார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிசிக்கல் டாஸ்க்

பிசிக்கல் டாஸ்க்

இந்த வாரமும் அரசியல் டாஸ்க் என வைத்து வாய்ச்சொல் வீரர்களுக்கே வேலை கொடுத்து விட்டார்களே பிசிக்கல் டாஸ்க் ஏதும் இல்லையா? என கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெற்றிக் கொடிகட்டு என பிசிக்கல் டாஸ்க் கொடுத்து கொடி நடுவதில் போட்டா போட்டி வைத்து பெரிய போரையே நடத்தி வருகின்றனர் பிக் பாஸ் குழு.

தாமரைக்கும் அபிநய்க்கும் சண்டை

தாமரைக்கும் அபிநய்க்கும் சண்டை

தற்போது வெளியாகி உள்ள புரமோவில் நிஜ அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு சட்டையை எல்லாம் கிழித்துக் கொண்டு சண்டை போடுவது போல கட்டிப் புரண்டு சண்டை போட்டு வருகின்றனர். கடைசியாக தாமரைக்கும் அபிநய்க்கும் இடையே நடைபெற்ற வாய்ச் சண்டை ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளது.

நேற்றே லீடு

நேற்றே லீடு

இப்படி ஒரு சண்டையை பிளான் பண்ணி வைத்து விட்டுத் தான் நேற்று தாமரைக்கும் அண்ணாச்சிக்கும் லேசான போட்டியை நடத்தினார்களா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதே போல அமீர் இமான் அண்ணாச்சியிடம் தாமரை நீங்களாக இருந்ததால் தான் பிரச்சனை பண்ணவில்லை, வேறு யாராவது இருந்திருந்தால் நடப்பதே வேறு என்று சொன்ன நிலையில், இன்றைய புரமோவை பார்த்தால் அப்படியே ஸ்க்ரிப்ட் கனகச்சிதமாக பொருந்துகிறதே என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X