மீண்டும் கடைசி இடத்தில் சிக்கிய பெரிய இடத்து பிள்ளைகள்.. வெளியேறியது யார் என ஊருக்கே தெரியுமே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5வது சீசனின் 77வது வாரத்தின் 3வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
கடைசி இரண்டு இடத்திலும் பெரிய இடத்து பிள்ளைகள் தான் உள்ளனர்.
பாடகி சின்னப்பொண்ணு வெளியேறும் போது இருந்தே இவர்கள் கடைசி இடத்தில் தொங்கிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்வேஸ் டேஞ்சர் ஜோன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பெரிய இடத்து பிள்ளைகள் என்றால் இருவரை மட்டும் தான் நெட்டிசன்கள் அதிகளவில் நோட் செய்து வருகின்றனர். ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் மற்றும் ஐசரி கணேஷின் மருமகன் வருண் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே டேஞ்சர் ஜோனில் தொங்கிக் கொண்டே 77 நாட்கள் வரை வந்து விட்டனர். இதில், ஒருவர் இன்று வெளியேறுகிறார்.

ஹீரோ வருண்
பப்பி படத்தின் மூலம் ஹீரோவான வருண் கோமாளி, சீறு, குட்டி ஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட காலங்களாக உருவாகி வரும் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் நாயகனும் இவர் தான். அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ராஹேய் பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவை திருமணம் செய்து அம்மாவாகவும் ஆகி விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயங்கர சப்போர்ட் உடன் கலந்து கொண்டாலும் வருணுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஃபைனலி அபிநய்
முதல் வாரத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒரே போட்டியாளர் என்றால் அது அபிநய் தான். ஆனால், ஏகப்பட்ட ஆதரவுகளுடன் 77 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தங்கி இருந்த அபிநய் ஃபைனலி இந்த 11வது வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளார் என தகவல்கள் கசிந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக மூன்றாவது புரமோவில் கடைசி இடத்தில் அபிநய் மற்றும் வருண் மட்டுமே உள்ளனர்.

பாவனிக்கு அபிநய் போகணும்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் ஒருவரிடம் மட்டுமே நல்ல நட்பாக பழகுவேன் என சொன்ன பாவனி அபிநய் தான் தனக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்தார். அவரை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என அப்படியே பிளேட்டை திருப்பி போட்டார். கமல் யார் சேவ் ஆவார்கள் என கேட்கும் போது வருண் சேவ் ஆவார் என பாவனி சொன்னதே அபிநயை எலிமினேட் ஆக்கியிருக்கும்.

அடுத்த வாரம் அமீர்
போன வாரம் பாவனி ஆர்மியினர் புண்ணியத்தால் தப்பித்த அபிநய் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேற உள்ள நிலையில், அடுத்த வாரம் பாவனியால் இந்த வாரம் கடைசி நேரத்தில் சேவ் ஆன அமீர் தான் கன்ஃபார்மாக வெளியேறுவார் என பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீரை வீட்டில் இருந்து வெளியேற்ற ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











