Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இந்த வார நாமினேஷன் லிஸ்ட்... அபினய்யை குறிவைத்து தாக்கும் போட்டியாளர்கள் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.
சொல்லி
அடிச்சுருக்காரு
சிவா...
அண்ணாத்த
இயக்குநரை
உச்சி
முகர்ந்த
சூப்பர்ஸ்டார்!
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 6வது வாரத்தை எட்டி உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்களுடன் பேசிய கமல்ஹாசன், பொம்மை டாஸ்கில் நடந்த சண்டை குறித்து கேட்டார். மேலும், பெண் என்பதால் யாரும் என் பேச்சை கேட்கவில்லை என பாவனி கூறியது குறித்து விளக்கம் கேட்டார்.

கேள்வி கேட்ட கமல்
தாமரை தலைவராக இருந்த போது என் பேச்சை யாரும் கேட்க மாட்டேன்றாங்க என்று புலம்பினார். அதேபோல, மதுமிதா, இசை, பாவனி ஆகியோருக்கும் இதே பிரச்சனைதான். ஆனால் சிபி, நிரூப் ஆகிய இருவரும் ஆட்சி செய்த நாட்களில் இந்தப் பிரச்சனை அதிகம் எழவில்லை. கமல் இதுபற்றி பேசியும் இதுகுறித்து வெளிப்படையாக பேசாமல் மழுப்பினர்.

அக்ஷரா, சிபியை கண்டித்தார்
அதேபோல, பொம்மை டாஸ்கின் போது, சிபி, அக்ஷரா கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டது குறித்தும் அவர்கள் இருவரையும் கண்டித்தார். இதையடுத்து, குறைந்த வாக்குகளை பெற்ற மதுமிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

3வது ப்ரோமோ
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில், பிரியங்கா ஐக்கி பெர்ரியை நாமினேட் செய்கிறார், இமான் அண்ணாச்சி பாவனியை நாமினேட் செய்கிறார். இதையடுத்து, நாமினேஷன் ப்ராசஸ் லிஸ்ட்டில் தேர்வானவர்களின் பெயரை பிக் பாஸ் அறிவிக்கிறார். இதில் இந்த வாரமும் அபினய்யின் பெயர் நாமினேஷனில் உள்ளது.

கடைசி நேரத்தில்
கடந்த வாரமும் அபினய்யின் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருந்தது. இறுதி வரை சென்று கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இந்த முறையும் அவரின் பெயர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளது.