அபிநய்க்கு என்னவொரு ஆர்வம்.. பாவனிக்கும் அமீருக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சிக்க எப்படி துடிக்கிறாரு?

சென்னை: பாவனிக்கும் புதுசா வந்த அமீர்க்கும் இடையே என்ன உறவு என்பதை தெரிந்து கொள்ள அபிநய் ஆர்வம் காட்டியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் ரொமான்டிக் டிராக்கை கஷ்டப்பட்டு உருவாக்க பிக் பாஸ் குழு முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அபிநய் நேரடியாக அமீரிடம் கேட்டதில் இருந்தே அபிநய் மனதில் பாவனி பற்றிய எண்ணம் எப்படி இருக்கிறது என புரிகிறது என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாவனிக்கு டவுட்டு

பாவனிக்கு டவுட்டு

ஜெமினி கணேசன் பேரனான அபிநய் நம்ம கிட்ட மட்டும் ஏன் ஆரம்பத்தில் இருந்து ஒரு மாதிரியாக பழகுகிறார் என்கிற எண்ணம் பாவனிக்கு வர அது பற்றி மதுமிதா, சுருதி, அபிஷேக் என சக போட்டியாளர்களிடம் பேசி விட்டு கடைசியாக அபிநயிடமே அது பற்றி கேட்டு விட்டார். திருமணம் ஆகி குழந்தை இருக்கும் ஒருவரிடம் இப்படி கேட்கலாமா என்பதை பாவனி கொஞ்சம் கூட உணரவில்லை.

ராஜு தப்பு பண்ணிட்டார்

ராஜு தப்பு பண்ணிட்டார்

கடந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பின்னாடியே ஷிவானி சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்து ரம்யா பாண்டியன் பாலா மாமா பாலா மாமா என கலாய்த்ததை கைதட்டி பார்த்து ரசித்த பிக் பாஸ் ரசிகர்கள் ராஜு அபிநயிடம் நீங்க பாவனியை லவ் பண்றீங்களா? என கேட்டதும் ராஜு தப்பு பண்ணிட்டார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜுவின் ஹேட்டர்கள் பொங்கினர்.

அமீரிடம் அந்த கேள்வி

அமீரிடம் அந்த கேள்வி

இந்நிலையில், அதே விஷயத்தை அபிநய் அமீரிடம் பாவனி பற்றி புரிந்து கொள்வது போல டாஸ்க்கை மையமாக வைத்து கேட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. பாவனி நிரூப்பை பிரதர் மாதிரி பார்க்கிறாள் என்றும் நீங்க பாவனியை எப்படி பார்க்கிறீங்க என்றும் கேள்வி எழுப்பினார்.

மழுப்பிய அமீர்

மழுப்பிய அமீர்

ஆனால், அதற்கு பதில் சொல்லாமல் வேறு ஒரு விஷயத்தை அழகாக டைவர்ட் பண்ணி அமீர் பேச அந்த விஷயத்தை க்ளியர் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அபிநய் மீண்டும் அதே இடத்திற்கு வந்த அந்த கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவில்லை அமீர் என மடக்கினார்.

என்ன உறவு

என்ன உறவு

பாவனியை தங்கச்சி என சொல்ல தயங்கிய அமீர் என்னை பொறுத்தவரையில் அவ ஒரு பைத்தியக்கார ஃபிரண்ட் என சொல்லி அபிநய் ஏன் இந்த கேள்வியை கேட்டோம் என்கிற ரீதிக்கு கொண்டு சென்று விட்டார் அமீர். இதுவரை யாருமே தனக்கு நட்பாக இல்லை என பாவனி சொல்ல் வந்த நிலையில், அபிநய் இதுவரை உனக்காக பேசியும் அவரை ஏன் நீங்க நண்பராக பார்க்கவில்லை என்கிற கேள்வியையும் ராஜு மறைமுகமாக முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

காப்பியடிக்கிறாரா பாவனி

காப்பியடிக்கிறாரா பாவனி

பாவனி உறவை சுற்றியே பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் மாறியது ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களுக்கும் ரொம்பவே கடுப்பாகி உள்ளது. நிரூப் எப்படி பிரியங்காவின் நட்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என நடித்து சோலோ கேம் ஆட முயற்சி செய்கிறாரோ அதே போல பாவனியும் தான் சோலோ கேம் ஆடுகிறேன் என்பதை மக்கள் மத்தியில் புரிய வைக்கவே இப்படி நாடகம் ஆடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X