நீ ஜெயிக்கப்பொறந்தவன்டா.. மீண்டும் முகெனை விடாமல் துரத்தும் அபிராமி.. கெஞ்சும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முகெனை ஒரு தலையாக காதலித்த அபிராமி, இன்னும் அவரை துரத்தி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி சக போட்டியாளரான முகெனை ஒரு தலையாக காதலித்தார். மலேசிய பாடகரான முகென் தனக்கு காதலி இருப்பதாக கூறியும் அவரை விடாமல் துரத்தி துரத்தி காதலித்தார் அபிராமி.
ஆனால் ஒவ்வொரு முறையும் முகென், அபிராமி தனக்கு நல்ல ஃபிரன்ட் என்று கூறினார். நீ வேண்டுமானால் ஃபிரன்டாயிரு, நான் உன்னை காதலிக்கிறேன், காதலிப்பேன், காதலித்துக்கொண்டேயிருப்பேன் என வசனம் பேசினார் அபிராமி.

மல்லுக்கட்டிய அபி
ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த வனிதா போட்ட தூபத்தால் மாறிய அபிராமி, ஒரே நாளில் முகெனின் மீதான காதலை மறந்து அவருடன் மல்லுக்கட்டினார். இதனால் இருவரும் நாற்காலியை தூக்கும் அளவுக்கு போனது விவகாரம்.

மக்கள் அச்சம்
ஏற்கனவே அபிராமியுடன் ஒருமுறை ஏற்பட்ட மோதலால் பிக்பாஸ் வீட்டில் இருந்த கட்டிலை உடைத்து சேதப்படுத்தினார் முகென். மீண்டும் சேரை தூக்கவும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது பார்வையாளர்களுக்கு.

முகென் குடும்பத்தினர்
அந்தளவுக்கு பிரளயத்தை ஏற்படுத்தினார் அபிராமி. அதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் முகெனின் குடும்பத்தினர் மலேசியாவில் இருந்து இந்தியா வந்தபோது அவரை சந்தித்து பேசினார் அபிராமி.

நெருக்கமான போட்டோ
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் முகென். இதனை தொடர்ந்து அபிராபி முகெனுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எப்போதும் சிறந்தவன்
அதில் நீ ஜெயிக்கப் பிறந்தவன்டா.. உன் அன்பு என்றும் அநாதையில்லை.. நீ எப்போதும் சிறந்தவன்.. எப்போதும் சொல்வதுதான் நீயாயிரு.. வித்தியாசமாயிரு.. லவ் யா... 3000 நண்பா.. எப்போதும் சிறந்த நண்பர்கள்.. இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் அபிராமி.
இது ஒரு பொழப்பா
இதனை பார்த்த நெட்டிசன்கள் அடிக்கடி ஆள மாத்துறதும் அப்புறம் சேத்துக்குறதும்.. இதெல்லாம் ஒரு பொழப்பா என திட்டி தீர்த்துள்ளனர்.
அம்மா தாயி..
இன்னும் சிலர் அம்மா தாயி அவனை விட்டுடும்மா என கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











