நான் பொண்ணே இல்லன்னு சொல்றாங்க.. பாலிவுட் போனாலும் விடமாட்றாங்க.. கதறும் மீரா மிதுன்!

Recommended Video

Meera Mithun Slams Kamal Hassan : கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்த மீரா-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே மீரா மிதுனுக்கும், சக ஹவுஸ்மேட்ஸ்ஸான அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பிறகும் அவர்களிடையேயான மோதல் அதிகரித்தது.

அபிராமி, சாக்ஷி, ஜோ மைக்கெல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தனது மொபைல் நம்பரை தங்களின் பர்சனல் சோஷியல் மீடியா குரூப்புகளுக்கு அனுப்பி வைத்து தன்னை துன்புறுத்துவதாக டிவிட்டியிருந்தார்.

படங்களிலிருந்து நீக்கம்

படங்களிலிருந்து நீக்கம்

இதோடு தன்னை டார்ச்சர் செய்வதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார் மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மீரா மிதுன், தமிழில் ஒப்பந்தமான சில படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மும்பையில் டெஸ்ட் ஷுட்

மும்பையில் டெஸ்ட் ஷுட்

இதனால் கோபப்பட்ட மீரா மிதுன், ஒரு தமிழ் பெண் தமிழகத்தில் வாழ வழியில்லை என கூறி தான் பாலிவுட்டுக்கு செல்வதாக தெரிவித்து மும்பை சென்றுள்ளார். மும்பையில் டெஸ்ட் ஷுட் நடப்பதாக கூறி அதற்கான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

மீரா மிதுன் வீடியோக்கள்

மீரா மிதுன் வீடியோக்கள்

இதனை பார்த்து பலர் கிண்டல் செய்து கமென்ட் அடித்திருந்தாலும் சிலர் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரண்டு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மீரா.

ரெண்டாவது நாள் ஷுட்

ரெண்டாவது நாள் ஷுட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முதல் வீடியோவில் பேசியிருப்பதாவது, எல்லாருக்கும் வணக்கம். ஏற்கனவே தமிழ்நாட்டுல எனக்கு என்ன பிரச்சனை போயிட்டு இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ மும்பையில வந்து நேத்து முதல் நாள் ஷுட் வெற்றிகரமா முடிஞ்சுது. இன்னைக்கு என்னோட இரண்டாவது நாள் ஷுட் ஆரம்பிச்சுது.

மென்டலாக்குறாங்க

அதுக்குள்ள, என்னோட நம்பர எல்லாருக்கும் கொடுத்து, நிறைய பேர் எனக்கு கால் பண்ணி.. என்னால ஹேன்டில் பண்ண முடியல.. என் டீம் கூட ஹேன்டில் பண்ண முடியல. அதனால நான் பேக் அப் பண்ணிட்டேன். தமிழ்நாட்டுல இருந்துதான் துரத்திட்டாங்க. இப்போ நான் மும்பையில வந்து வேலை பாக்குறதையும் இந்த மாதிரி சீப்பா பண்ணி என்னை மென்டலாக்குறாங்க. இதுக்கப்புறம் என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல. இவ்வாறு கூறியிருக்கிறார் மீரா.

ஹேட்டர்ஸே கிடையாது

ஹேட்டர்ஸே கிடையாது

மற்றொரு வீடியோவில், என்னை எவ்ளோ இழிவு படுத்த முடியுமோ அவ்ளோ இழிவுபடுத்தியிருக்காங்க. எனக்கு சோஷியல் மீடியாவுல ஹேட்டர்ஸே கிடையாது. நான் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வேலை பார்த்திருக்கேன். மக்கள் என்ன லவ் பண்றாங்க. ஏன்னா பிக்பாஸ் வீட்ல ஒரிஜினலா இருந்தது நான் மட்டும்தான்னு. பிக்பாஸ் போயிட்டு வந்த பிறகுதான் எனக்கு புகழ் அதிகமாச்சு. புகழ் அதிகமான அளவுக்கு எனக்கு பிரச்சனையும் அதிகமாச்சு.

நான் பொண்ணு இல்லன்னு..

சோஷியல் மீடியாவுல எனக்கு ஹேட்டர்ஸ் இருக்குற மாதிரி கிரியேட் பண்ணியிருக்காங்க. அதுவும் வொர்க்கவுட் ஆகல. அதனால நான் பொண்ணு இல்லன்னு ஒரு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க. சாக்ஷியும் அபிராமியும்தான் இதை பண்ணிட்டு இருக்காங்க. ஒரு தமிழ் பெண்ணுக்கு தமிழ்நாட்டுல ஏன் இவ்ளோ பிரச்சனைன்னு எனக்கு தெரியல. இவ்வாறு குமுறியிருக்கிறார் மீரா மிதுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X