தளபதி 64ல் தர்ஷன்.. விஜய் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியானது.. அப்போ கமல் படம்?

விஜய் அம்மாவுடன் தர்ஷன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் தர்ஷன் மற்றும் அபிராமி நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவை சந்தித்து பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் அபிராமி. தர்ஷன் தற்போது சனம் ஷெட்டியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். கமல் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

அபிராமியை பொறுத்த வரை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு

சிம்பு

இந்நிலையில் பிக் பாஸ் போட்டி முடிவடைந்துள்ளதால், அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களுக்கு நெருக்கமான சினிமா பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். சமீபத்தில் சாண்டி சிம்புவையும், கமலையும் சந்தித்தார்.

தர்ஷன்

தர்ஷன்

இந்நிலையில் அபிராமி மற்றும் தர்ஷன் ஆகிய இரண்டு பேரும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்டனர். அதில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவும் பங்கேற்றார். அப்போது தர்ஷன் மற்றும் அபிராமி சோபாவை தனித்தனியாக சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டு வாழ்த்து பெற்றனர்.

விஜய்யின் அம்மா

விஜய்யின் அம்மா

இந்த புகைப்படங்களை அவர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். "இப்போது விஜய்யின் அம்மாவை சந்தித்துள்ளேன். விரைவில் விஜய்யை சந்திப்பேன்" என அபிராமி குறிப்பிட்டுள்ளார்.

தளபதி 64ல் தர்ஷன்

தளபதி 64 படத்தில் தர்ஷன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை உறுதியே படுத்திவிட்டனர். மேலும் அபிராமியின் போட்டோவை பார்த்து, "தலக்கூட நடிச்சாச்சு, அடுத்து தளபதிக்கூட நடிக்க தயாராகுறீங்களா" என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

கமல் படம் எப்போ?

கமல் படம் எப்போ?

இந்த போட்டோக்களை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை தர்ஷன் தளபதி 64 படத்தில் நடிப்பது உறுதியானால், கமல் படத்தில் அதற்குப் பின்னர் தான் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எது எப்படியோ தர்ஷனுக்கு நிறைய படங்கள் கிடைத்தால் சந்தோசம் தான் என்பதே அவர்களது ரசிகர்களின் மனநிலை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X