அபிராமிம்மா.. அவ்ளோ நல்லவளா நீ? பிக்பாஸ் வீட்ல என்னன்னவோ நடக்குதே!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 4 Promo 2: அபியின் நடவடிக்கையில் ஏன் இந்த மாற்றம்?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரமோவில் கண்ணீர்விட்டு அழும் மீராவுக்கு தண்ணீர் கொடுக்கிறார் அபிராமி.

பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் மீரா மிதுன். 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் மீரா.

அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் மோசடி செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டதை தொடர்ந்து அந்தப் பட்டம் திரும்ப பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் மீரா.

கார்னர் செய்யப்படும் மீரா

கார்னர் செய்யப்படும் மீரா

மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது அபிராமிக்கும் சாக்ஷிக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனை பகிரங்கமாகவே கூறினர் இருவரும். அவர்களுடன் நடிகை ஷெரினும் கூட்டு சேர்ந்து கார்னர் செய்ய தொடங்கினர்.

பாடாய் படுத்தும் குரூப்

பாடாய் படுத்தும் குரூப்

நேற்று தேவை இல்லாத ஒரு பிரச்சனையை பெரிதாக்கி பிக்பாஸ் வீட்டின் கேப்டனான வனிதா மீராவை அழ வைத்தார். எப்படியோ அபிராமி, சாக்ஷி, ஷெரின், வனிதா என கூட்டு சேர்ந்து மீராவை பாடாய் படுத்த தொடங்கிவிட்டனர்.

சண்டையின் போது

சண்டையின் போது

மீராவை, அபிராமி நேற்றும் சரி அதற்கு முந்தைய நாளும் சரி கண்டபடி அவள், இவள் என திட்டியதோடு, பேக், பொய் என்றெல்லாம் பேசினார். நேற்று நடைபெற்ற சண்டையின் போது கூட மூஞ்சில் அடித்தாற் போல் பேசினார்.

ஃபாத்திமாவிடம் அழும் மீரா

ஃபாத்திமாவிடம் அழும் மீரா

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில் மீரா மிதுன், ஃபாத்திமா பாபுவிடம் என் மீது பொறாமைபடுவதை என பிடிக்காது அது எனக்கு கஷ்டமான விஷயம் என்றும் அவர் கூறுகிறார். மேலும் என்னால் ஃபீல் பண்ணமுடியும் ஏன் பேசுறாங்க? எதுக்காக பேசுறாங்க என்று கூறி கண்ணீர் விடுகிறார்.

தண்ணீர் கொடுக்கும் அபிராமி

தண்ணீர் கொடுக்கும் அபிராமி

இதனை வாக்கிங் போவது போல் கவனிக்கும் அபிராமி ஒரு கிளாஸில் மீராவுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறார். அதனை வாங்கி மீராவும் குடிக்கிறார், இப்படியாக முடிகிறது அந்த ப்ரமோ.

அவ்வளவு நல்லவளா நீ?

அவ்வளவு நல்லவளா நீ?

மீரா அழுகைக்கு நிச்சயம் அபிராமி, சாக்ஷி, வனிதா, ஷெரின் ஆகியோர்தான் காரணமாக இருப்பார்கள். ஏனெனில் மீரா வந்த நாளில் இருந்து அவர்களுக்குதான் அவரை கண்டாலே பிடிக்கவில்லை. அவர்கள் பேசியதாலேயே கண்டிப்பாக மீரா அழுதிருப்பார். ஆனால் மீரா அழும்போது நல்லவர் போல் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறார் அபிராமி. அபிராமிம்மா.. அவ்வளவு நல்லவளா நீ என கேட்கின்றனர் ப்ரமோவை பார்த்த ரசிகர்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X