twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி படத்தால் நஷ்டமானேன் இப்போ சீரியல் எடுக்கறேன்: அபிராமி ராமநாதன்

    By Mayura Akilan
    |

    சிவரகசியம் என்ற புதிய தொடரை அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார். இந்த தொடரின் தொடக்கவிழா பிரம்மாண்டமாக நேற்று சென்னையில் நடைபெற்றது.

    அபிராமி மெகா மால் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாயாவி மாரீசன் உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து இருக்கிறார்.

    தற்போது 'சிவ ரகசியம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட மெகா சீரியல் ஒன்றை தயாரிக்கிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுகு பல திகில் தொடங்களுக்கு கதை, திரைக்கதை எழுதிய இந்திரா செளந்தராஜன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

    பல வெற்றித் தொடர்களை இயக்கியவரும், விரைவில் வெளியாக உள்ள 'புதியதோர் உலகம் செய்வோம்' படத்தின் இயக்குநருமான பி.நித்யானந்தம் இயக்கும் இத்தொடருக்கு அசோகன் வசனம் எழுத, ரவீந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். கிரண் இசையமைக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் தினமும் இரவு 10 மணிக்கு ஜி தமிழில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது.

    இந்த தொலைக்காட்சித் தொடரின் துவக்கவிழா நேற்று அபிராமி மெகாமாலில் நடைபெற்றது. லிங்குசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியல் படப்பிடிப்பினை தொடக்கிவைத்தார்.

    சிவ ஆலயத்தின் கதை

    சிவ ஆலயத்தின் கதை

    பூமிகாத்தான்பட்டி என்ற அதிய கிராமம், மழை வளமும், இயற்கை வளமும் உள்ள கிராமமாக எப்போதும் செழிப்பாக உள்ளது. இந்த கிராமத்தில் ரமணீஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. சித்தர்களால் கட்டப்பட்டு அவர்களின் ஆகமப்படி இங்கே வழிபாடு நடக்கிறது. குறிப்பாக பெளர்ணமி இரவில் ஆலயத்தில் நடைபெறும் சித்த யாக பூஜை பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    ஊர் கட்டுப்பாடு

    ஊர் கட்டுப்பாடு

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தவிர வேறு யாரும் இந்த ஊரில் இடம் வாங்கவோ, வீடு கட்டவோ முடியாது. காலம் காலமாக இங்கே இப்படி ஒரு கட்டுப்பாடும் உண்டு. இந்த ஊர்வாசிகளும் ரசமணீச்வரரிடம் எதற்கும் உத்தரவு கேட்டே செயல்படுவார்கள்.

    கோவில் ரகசியம் என்ன

    கோவில் ரகசியம் என்ன

    இப்படி ஒரு ஊரில் இதன் மழை மற்றும் இயற்கை வளத்தை வைத்து சர்க்கரை தொழிற்சாலை ஒன்றை அமைக்க ஒருவர் முயல்கிறார். ஆனால், கோவிலில் உத்தரவு கிடைக்காத நிலையில், அவர் கோவிலில் நிலவும் சித்த ரகசியங்களை தெரிந்துக்கொள்ள கட்டுப்பாடுகளை மீறுகிறார். அப்படி மீறும் அவர் சித்த ரகசியங்களை தெரிந்துக்கொண்டாரா, அவருக்கு என்ன நேர்ந்தது என்பது கதை.

    கொலை குற்றம்

    கொலை குற்றம்

    இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டுப்பாட்டை மீறப்போய் கொலைக் குற்றத்திற்கு ஆளாகி தூக்குத் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார்.

    இவரைக் காப்பாற்ற காக்கைச் சித்தர் எனும் சித்தரை நம்புகிறார் தூக்குத் தண்டனை கைதியின் மனைவி. காக்கைச் சித்தர் அஷ்டமாசித்தி பெற்றவர். குறிப்பாக கூடு விட்டுக் கூடு பாய்வதில் வல்லவர். இவர் தூக்கு தண்டனை கைதி தப்பிக்க உதவினாரா இல்லையா என்பது மறுபுறம் பயணிக்கிறது.

    சித்தர்களின் வாழ்க்கை

    சித்தர்களின் வாழ்க்கை

    இப்படி சித்தர்களின் புதிரான வாழ்க்கையையும், அவர்களுடைய சாகசங்களையும் மெய்சிலிக்கும் விதத்தில் இந்த சீரியலில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

    நெடுந்தொடர் தொடக்கவிழா

    நெடுந்தொடர் தொடக்கவிழா

    இந்த சீரியலின் தொடக்க விழா நேற்று சென்னை அபிராமி திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் கிரியேட்டிவ் ஹெட் சீத்தா, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

    ஹாலிவுட் படம்

    ஹாலிவுட் படம்

    விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், தியேட்டர் அதிபராக ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்த நான் அதை செலவு செய்யத் தெரியாமல் படம் எடுக்க போனேன். நான் எடுத்தது படம் தமிழ்ப்படம் அல்ல. ஹாலிவுட் படம் என்று பேச்சை நிறுத்தி சஸ்பென்ஸ் வைத்தவர் பிறகு தொடர்ந்து பேசும்போது புதிரை அவிழ்த்தார்.

    ரஜினி நடித்த ஆங்கிலப்படம்

    ரஜினி நடித்த ஆங்கிலப்படம்

    அமெரிக்க நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பில் அந்த ஹாலிவுட் படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம்...ரஜினி காந்த் நடித்த ப்ளட் ஸ்டோன். என்று அவர் சொன்னபோது பலருக்கும் ஆச்சர்யம்!

    கையை கடித்த ப்ளட் ஸ்டோன்

    கையை கடித்த ப்ளட் ஸ்டோன்

    அமெரிக்க நிறுவனத்துடன் தயாரித்த நான் அந்தப் படத்தைத் நம் ஊரில் ரிலீஸ் பண்ணினேன். அமெரிக்க கம்பெனி மற்ற நாடுகளில் ரிலீஸ் பண்ணினார்கள். இங்கே ரிலீஸ் பண்ணி கிடைக்கும் லாப நஷ்டம் எனக்கு. வெளிநாடுகளில் கிடைக்கும் லாப நஷ்டம் அவர்களுக்கு என்பதுதான் அக்ரிமெண்ட். நம்ம நேரம்.. வெளிநாடுகளில் நன்றாக ஓடிய ப்ளட் ஸ்டோன் படம் இங்கே சரியாக ஓடவில்லை. கையைக் கடித்துவிட்டது என்றார்.

    மனைவியுடன் போட்டி

    மனைவியுடன் போட்டி

    நான் நிறைய சீரியல் எடுத்தேன் நான் எடுத்த சீரியல் 1 வருடம் ஓடியது. என் மனைவி எடுத்த சுற்றுலா பற்றிய தொடர் 5 வருடம் ஓடியது. இப்போது மனைவியுடன் போட்டி போடும் வகையில் மீண்டும் சிவரகசியம் பற்றி சீரியல் எடுக்கிறேன் என்றார்.

    லிங்குசாமி பாராட்டு

    லிங்குசாமி பாராட்டு

    இறுதியாக பேசிய லிங்குசாமி, "ரஜினி நடிப்பில் உருவான ‘பிளட்ஸ்டோன்' படத்தை அபிராமி ராமநாதன் சார் தான் தயாரித்தார் என்பதை நான் இப்போது தான் தெரிந்துக்கொண்டேன். அவர் மேலும் பல படங்களை தயாரித்து, அதில் சிலவற்றில் நஷ்ட்டம் ஏற்பட்டாலும், இன்னமும் சினிமாவை விடாமல், தற்போது தொலைக்காட்சி தொடரை தயாரிக்கிறார்.

    திரைப்பட விழா போல

    திரைப்பட விழா போல

    இது ஏதோ ஒரு சாதாரண விழாவாக இருக்கும் என்று நினைத்து தான் நான் வந்தேன், ஆனால், ஒரு திரைப்படத்தின் துவக்க விழாவைப் போல இந்த நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்துகிறார். இப்படி சினிமா மீது இன்னமும் ஆர்வம் காட்டும் அவர், இந்த தொலைக்காட்சி தொடரோடு நின்றுவிடாமல் மீண்டும் திரைப்படம் தயாரிக்க வேண்டும்.

    நல்ல படங்களை தயாரிக்கலாம்

    நல்ல படங்களை தயாரிக்கலாம்

    தற்போது சினிமா நன்றாக உள்ளது. அதில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து அவர் பல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அவருடைய எப்போது உறுதுணையாக நாங்கள் இருப்போம், என்பதையும் இங்கே கூறிக்கொள்கிறேன்." என்றார்.

    English summary
    Abirami Ramanathan at Siva Ragasiyam Mega Serial Launch in Abirami Megamall on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X