நல்லா இருக்குற பிக் பாஸ் வீடும் மூணு பழைய விருந்தாளிகளும் - என்னவாகப்போகுதோ

Recommended Video

Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

சென்னை: பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகிய மூன்று பேர்களும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் மூவரும் இங்கு ஒரு வாரம் வரை விருந்தினர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் பற்றி பேசாத ஒரு நாள் சாதாரண நாளாகவே இப்போதைய தமிழகத்துக்கு இருக்கிறது. பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொன்னாலும் கூட, சர்ச்சைகளும், குழப்பங்களும் அந்த நிகழ்ச்சியை பற்றி பேச வைக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து, தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாம் சீசனில் விட்ட டி.ஆர்.பி ரேட்டிங்கை மூன்றாம் சீஸனில் பிடித்து விட்டார்கள்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் மதுமீதா மீது ஏகோபித்த ஆதரவு ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் அதிகமான மக்களின் கோபத்திற்கும் ஆளானார்.

வனிதா

வனிதா

இது ஒரு புறம் இருக்க வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீது கடந்த சீசனை விட சர்ச்சைகள் அதிகமாக கிளம்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேற்றபடவில்லை.

மூன்று விருந்தினர்கள்

மூன்று விருந்தினர்கள்

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று பேர் விருந்தினர்களாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த 3 பேர் என்ற கேள்விக்கு விடை, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விருந்தாளிகள் வந்துட்டாங்க

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகிய மூவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவது போல் வீடியோ வெளியானது. இவர்கள் மூவரும் ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வர வேண்டும் என கமல் கேள்வி எழுப்பி இருந்தார்.

என்னவாகப்போகுதோ

என்னவாகப்போகுதோ

அதற்கு அங்குள்ளவர்களில் பெரும்பாலும் அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா பெயரை கூறினர். இப்போது அதற்கேற்றவாறே அவர்கள் மூவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். இனி ஒரு வாரத்திற்கு நிச்சயம் பிக் பாஸ் வீடு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X