ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து?.. அபிஷேக் பச்சன் செய்த காரியம்.. திடீரென டிரெண்டான 'Grey Divorce'
மும்பை: இந்தி படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து உலகளவில் பிரபலமான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக் கொண்டார்.
1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான இருவர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராயை காதலித்த அபிஷேக் பச்சன் அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ஆராத்யா எனும் மகள் உள்ளார். சமீப காலமாக விவாகரத்து சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக அபிஷேக் பச்சன் பண்ண ஒரு விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமீர்கான் முதல் தனுஷ் வரை: சமீப காலமாக பல ஆண்டுகள் திருமண வாழ்கையில் நடத்தி போர் அடித்து விட ஏதோ ஒரு ஈகோ பிரச்சனை காரணமாக பிரபலங்கள் விவாகரத்து கேட்டு பிரிந்து வருகின்றனர். அதற்கு 'கிரே டைவர்ஸ்' என்கிற பெயரையும் சூட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியை பிரிந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் விவாகரத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரு மகன்களும் தோளுக்கு மேல் வளர்ந்த நிலையில், விவாகரத்து செய்துள்ளனர். அந்த வரிசையில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பிரியப் போவது உறுதி என்கின்றனர்.
வீட்டை விட்டு வெளியேற்றம்: நடிகை ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டே வெளியேறி விட்டதாக சில மாதங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் தான் அவரது மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கணவர் அபிஷேக் பச்சனும் மனைவி ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக கலந்து கொண்டு மகளின் பர்ஃபார்மன்ஸை மனதார கண்டு ரசித்தனர். மேலும், ஆர்ச்சீஸ் எனும் நெட்பிளிக்ஸ் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கும் ஒன்றாக சென்றனர். அம்பானி மகன் திருமண விழாவில் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக தென்படவில்லை. மகளுடன் மட்டுமே ஐஸ்வர்யா ராய் வந்திருந்தார். அமிதாப் பச்சன் அருகில் கூட ஐஸ்வர்யா ராய் இல்லாதது ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிளப்பின.
மகளுக்காக: ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே கருத்து மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வெடித்து வருவதாகவும் மகளுக்காக மட்டுமே இருவரும் ஒரே வீட்டில் இருந்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தொடர்ந்து குழந்தைக்கு முன்னால் சண்டை வேண்டாம் என நினைத்து தான் தற்போது இருவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மகளுக்கான விஷயங்களில் பங்கேற்பதாகவும், மகளின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
'க்ரே டைவர்ஸ்': குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், 50 வயதை கடந்த தம்பதியினர் விவாகரத்து செய்து பிரிவது 'க்ரே டைவர்ஸ்' என அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது இது டிரெண்டாகி வருகிறது. குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழும் தம்பதியினர் நரைத்த பின்னர், தங்களுக்கான வேறு துணையை தேடிக் கொள்வதும், புதிய வாழ்க்கை விரும்பவும் ஆசைப்பட்டே இதை செய்கின்றனர். லேட்டஸ்ட்டாக அபிஷேக் பச்சன் 'Grey Divorce' தொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றுக்கு லைக் போட்ட நிலையில், மீண்டும் விவாகரத்து பஞ்சாயத்து வெடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











