Ponniyin selvan 2 - ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த படம் பொன்னியின் செல்வன்தான்.. அபிஷேக் பச்சன் பெருமிதம்

அபுதாபி: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) ஒரு நடிகராக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த படம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்தான் என அபிஷேக் பச்சன் தெரிவித்திருக்கிறார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவானது.முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. படத்தில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து தங்களது பாஸிட்டிவ் வரவேற்பை கொடுத்தனர். இதன் காரணமாக படக்குழு மகிழ்ச்சியில் இருந்தது.

Abishek Bachchan Praises Aishwarya Rai for Ponniyin selvan 2

பொன்னியின் செல்வன் 2:

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் 1ல் இருந்த குறைகள் நிச்சயம் பொன்னியின் செல்வன் 2ல் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுத்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி படத்தில் குறைகள் குறைவதற்கு பதிலாக அதிகரித்திருப்பதாக பேச்சு எழுந்தது.

மாற்றிவிட்டார் மணிரத்னம்:

குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவார் என்று கல்கி எழுதியிருந்த சூழலில் படத்திலோ அவர் காதலுக்காக சாவது போல் மணிரத்னம் காட்சிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்தனர். மேலும் வரலாற்றை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் ஓபனாகவே கூறினர். மேலும் மேக்கிங் ரீதியாகவும் படம் ரொம்பவே சுமார் என்ற ரிசல்ட்டே வந்தது.

வசூலில் டல்:

முதல் பாகம் 500 கோடி ரூபாயை வசூலித்ததால் நிச்சயம் இரண்டாம் பாகம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் ரொம்பவே டல் அடித்திருக்கிறது. படம் வெளியாகி ஒரு மாதம் முடிவடைந்திருக்கும் சூழலில் இதுவரை படம் 400லிருந்து 500 கோடி ரூபாய்வரைதான் வசூலித்திருக்கும் என்ற பேச்சு திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படக்குழு அப்செட்டாகியுள்ளது.

Abishek Bachchan Praises Aishwarya Rai for Ponniyin selvan 2

பாராட்டை பெற்ற ஐஸ்வர்யா ராய்:

படம் எப்படி போனாலும் அதில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பாராட்டை பெற்றிருக்கிறார். கல்கி கற்பனையாக உருவாக்கிய நந்தினி கதாபாத்திரத்தை திரையில் நிஜமாகவே காட்டிவிட்டார் ஐஸ்வர்யா ராய். அவரது ஒவ்வொரு அசைவிலும் வஞ்சம், வன்மம்,காதல் என அனைத்தையுமே கலந்துகட்டி அசாத்தியமாக நடித்திருக்கிறார் என பாராட்டு குவிந்தது.

அபிஷேக் பச்சன் பாராட்டு:

இந்நிலையில் நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் துபாயில் நடைபெறும் IIFA விருது நிகழ்ச்சியை விக்கி கவுசலுடன் தொகுத்து வழங்குகிறார். அப்போது பேசிய அவர், ஒரு நடிகராக ஐஸ்வர்யா ராய் இதுநாள்வரை நடித்த படங்களில் ஆகச் சிறந்த படம் 'பொன்னியின் செல்வன் 2' என அவரிடமே நான் கூறிவிட்டேன். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை கையாள்வது நம்பமுடியாத சாதனைதான். வெவ்வேறு லேயர்களைக் கொண்ட அந்தக் கதாபாத்தில் ஐஸ்வர்யா அற்புதமாக நடித்திருந்தார். அவரைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X