எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணுங்க...டபுள் கேம் ஆடும் அபிஷேக்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 18 வது நாளை எட்டி உள்ளது. நிகழ்ச்சி துவங்கிய முதல் இரண்டு வாரங்கள் போட்டியாளர்கள் தங்களின் கதைகளை சொல்வது, அதற்கு மற்ற ஹவுஸ்மெட்கள் லைக், டிஸ்லைக் கொடுப்பது, குரூப் உருவானது என சென்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மூன்றாவது வாரத்தின் துவக்கத்தில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு, வரும் வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.

நாமினேட் செய்யப்பட்டவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் பஞ்ச தந்திரங்களின் பெயர்களில் வைக்கப்பட்டுள்ள 5 நாணயங்களை போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாமல் கைப்பற்ற வேண்டும். போட்டியின் முடிவில் யாரிடம் அதிக நாணயங்கள் உள்ளதோ அவர் அந்த பவரை பயன்படுத்தி நாமினேஷில் இருந்து தன்னையோ அல்லது தனக்கு விருப்பமானவர்களையோ காப்பாற்றிக் கொள்ளலாம்.

கொளுத்தி போடும் அபிஷேக்

கொளுத்தி போடும் அபிஷேக்

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் இந்த டாஸ்கில் பல குழப்பங்கள், விதிமீறல்கள், சண்டைகள், வாக்குவாதங்கள் ஆகியன நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 18 வது நாளுக்கான ப்ரோமோக்கள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் முதல் ப்ரோமோவில் டைனிங் டேபிளில் ஹவுஸ்மெட்கள் அனைவரும் அமர்ந்து, மற்றவர்கள் பற்றி தங்களின் கருத்தை சொல்கிறார்கள். அப்போது அபிஷேக் கொளுத்தி போடுவதை போல் தனக்கு தோன்றுவதாக அண்ணாச்சி சொல்கிறார். இதற்கு சிபி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

டபுள் கேம் ஆடும் அபிஷேக்

டபுள் கேம் ஆடும் அபிஷேக்

இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில் அண்ணாச்சியின் கணிப்பு சரி என்பதை போல் அபிஷேக், ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களிடம் வேறு வேறு விதமாக பேசி, பிரிவினை ஏற்படுத்தி வருகிறார். அவரின் டபுள் கேமினை புரிந்து கொள்ளமல், அவர் சொல்வதை மற்றவர்களும் நம்புவதாக அமைந்துள்ளது.

வருணை வர விடாத

வருணை வர விடாத

இந்த ப்ரோமோவில், பாவனியிடம் சென்று, டாப் 5 ல் நீ, நான் இருக்கனும். எந்த காரணத்திற்காகவும் வருணை இங்கே கால் வைக்க விடாதே. வருண் இங்க கால் வைத்தால்.... என்கிறார் அபிஷேக். அடுத்த ஷாட்டில், வருணிடம் சென்று, உன்னை ஹாலில் விட மாட்டார்கள். கடைசிய வரை உன்னை விட மாட்டார்கள் என்கிறார்.

வருணை உசுப்பேற்றும் அபிஷேக்

வருணை உசுப்பேற்றும் அபிஷேக்

அடுத்த ஷாட்டில் சுருதி, அது அவங்க இரண்டு கேங்கிற்கு இடையேயானது. இதை பற்றி நீ ஏன் யோசிக்கிற அபிஷேக் என கேட்கிறார். அதற்கு அபிஷேக், என்னை பொறுத்தவரை அது வருணுக்கு போக கூடாது என்கிறார். ஆனால் அடுத்த ஷாட்டிலேயே வருணிடம் சென்று, ஹாலை மட்டும் எப்படியாவது டார்கெட் செய் என்கிறார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று, பேசியே வீட்டிற்குள் போய் காட்டவா என சேலஞ்ச் பண்றான் என்கிறார் பாவனியிடம்.

எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணுங்க

எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணுங்க

பிறகு கிச்சனில் இருக்கும் சுருதி, இசைவாணி மற்றும் நிரூப்பிடம் சென்று, எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணுங்க என்கிறார் அபிஷேக். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர், அபிஷேக்கை சமாளிக்க பாலா மாதிரி ஒரு கேரக்டர் வேணும் இந்த சீசனுக்கு என தெரிவித்துள்ளனர். இன்னும் பலர், என்னது எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணனுமா. அப்போ உன்னை போட்டு தள்ளிறலாமா என கலாய்த்துள்ளனர்.

இவர் இல்லாத ப்ரோமோ இல்லையா

இவர் இல்லாத ப்ரோமோ இல்லையா

இவன் லூசா இல்ல, லூசு மாதிரி நடிக்கிறானா. டாப் 5 ல இருக்கணுமா. அவ வேணா இருப்பா. ஆனா நீ இருக்க மாட்டடா. அபிஷேக் மற்றும் பிரியங்கா ரொம்ப இரிடேட் பண்ணுவதாக ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். அபிஷேக் தவிர இந்த வீட்டில் வேறு யாருமே இல்லையா. ஏன் எல்லா ப்ரோமோவையும் அவரையே காட்டுறீங்க என விஜய் டிவி.,க்கு பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X