சூப்பர் சிங்கர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணத்தில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலம்.. வைரலாகும் பிக்ஸ்!

சென்னை: சூப்பர் சிங்கர் போட்டியாளர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் கலந்து கொண்டு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

அதிலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். சினிமாவுக்கு ஏகப்பட்ட பின்னணி பாடகர்களை ஒவ்வொரு ஆண்டும் எக்ஸ்போர்ட் செய்து வருகிறது.

அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணம்

அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணம்

சூப்பர் சிங்கர் போட்டியாளர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷர்மதா விஸ்வநாத் இருவருக்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. சூப்பர் சிங்கர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

மனைவியுடன் இணைந்து

மனைவியுடன் இணைந்து

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மனைவி ஷர்மதா விஸ்வநாத் உடன் இணைந்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நடத்திய இசைக்கச்சேரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவருடைய மனைவி வயலின் வாசிக்க வெண்ணிலவே வெண்ணிலவே பாடலை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

தனது தந்தையைன் அஸ்தியை கரைக்க இமயமலை வரை டூர் சென்று வந்த அபிஷேக் ராஜா ஷாக்கிங் சர்ப்ரைஸாக இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன. இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் திருமணத்தை மிஸ் பண்ணாமல் கலந்து கொண்டிருக்கிறார் அபிஷேக் ராஜா.

அதற்கு வாய்ப்பில்லை

அதற்கு வாய்ப்பில்லை

அபிஷேக் ராஜா அவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சஞ்சீவின் பெயர் வைல்டு கார்டு என்ட்ரிக்கு அடிபட்டு வருவதால் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

சூப்பர் சிங்கர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சூப்பர் சிங்கர் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். அபிஷேக் ராஜா மட்டுமின்றி ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்களும் இவர்கள் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X