என்ன இப்படி ஆகிடுச்சே? பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது அபிஷேக் ராஜா தானாம்!

சென்னை: அபிஷேக் ராஜாவை எப்படியாவது பாவனி அல்லது நிரூப் இந்த வாரம் சேவ் பண்ணி விடுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக அபிஷேக் ராஜா தான் இந்த வாரம் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை கொண்டு வந்து ஆஜித்தை காப்பாற்றியது போல இந்த வாரம் காயின் டாஸ்க்கை கொண்டு வந்து அபிஷேக் ராஜாவை காப்பாற்ற பிக் பாஸ் பிளான் போட்டு விட்டது என பலரும் விமர்சனம் செய்ய பிக் பாஸ் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என அபிஷேக்கை வெளியேற்றி உள்ளது.

சனிக்கிழமை எபிசோடிலேயே அபிஷேக் ராஜா மீது கமல் கடுப்பான நிலையில், இந்த அதிரடி வெளியேற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.

அபிஷேக் எலிமினேட்டட்

அபிஷேக் எலிமினேட்டட்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இந்த வாரம் விமர்சகர் அபிஷேக் ராஜா தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங் சற்று முன்னர் முடிந்த நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் அபிஷேக்கின் எலிமினேஷனை காணலாம்.

போன வாரமே போயிருக்கணும்

போன வாரமே போயிருக்கணும்

கடந்த வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த ஓட்டுக்களை பெற்ற அபிஷேக் ராஜா தான் வெளியேறி இருக்கணும் என ரசிகர்கள் கருத்து கணிப்பு நடத்திய நிலையில், நாடியா சங் வெளியேறினார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அபிஷேக் ராஜா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது.

யாருமே சேவ் பண்ணலயா

யாருமே சேவ் பண்ணலயா

அபிஷேக் ராஜாவை காப்பாற்றத்தான் இந்த வாரம் பஞ்ச பூத டாஸ்க்கே நடத்தப்பட்டது என ரசிகர்கள் குற்றம்சாட்டியதும் பிக் பாஸ் குழுவினர் காதுகளுக்கு எட்டியுள்ளது போல அபிஷேக்கை வெளியே அனுப்பி விளையாட்டு காட்டலாமே என இந்த வாரம் அதிரடியாக அவரை வெளியே அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த காயின்களை கொண்டு யாருமே அபிஷேக்கை சேவ் பண்ணலயா? என்கிற கேள்வி தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏமாற்றினாரா பாவனி

ஏமாற்றினாரா பாவனி

நிரூப் எப்படியும் அந்த காயினை கொண்டு பிரியங்காவை தான் காப்பாற்ற முயல்வார் என்பதை புரிந்து கொண்ட அபிஷேக் அப்படியே ரூட்டை பாவனி பக்கம் திருப்பி அவரை கன்வின்ஸ் பண்ண நினைத்தார். பாவனியும் நீ டவுன் ஆகிடாத அபிஷேக் என டயலாக் எல்லாம் பேசிய நிலையில், அந்த காயினை பாவனி அபிஷேக்கிற்காக யூஸ் பண்ணாமல் ஏமாற்றி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாவனி தனக்காக மட்டும் தான் அதனை பயன்படுத்துவார் என்பது இதில் இருந்து தெளிவாகி உள்ளது.

கமல் பார்த்து இருப்பாரோ

கமல் பார்த்து இருப்பாரோ

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதனை தொகுத்து வழங்கிய கமல் சார் பற்றியும் அவதூறாக அபிஷேக் ராஜா பேசிய வீடியோவை கமல் சாரும் பார்த்திருப்பார் என்றே தெரிகிறது. சனிக்கிழமை எபிசோடிலும் அபிஷேக் ராஜாவை வச்சு செய்யும் கமல் இந்த வாரம் அபிஷேக் ராஜாவையே எலிமினேட் செய்து விட்டாரோ என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X