பிக் பாஸ் டைட்டில் வின்னராக யார் வருவா? அபிஷேக் ராஜாவின் சாய்ஸ் இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் இவங்க தான் என அபிஷேக் ராஜா சொன்ன கருத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா தான் தனக்கு தோழி என்றும் மதுமிதா தன்னோட மகள் என்றும் பாவனி பக்கத்து வீட்டு பெண் போன்றவர் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உறவு வைத்து பேசியுள்ளார்.

எதிர்பாராத விதமாக கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா இன்னமும் சமூக வலைதளங்களையும் எபிசோடுகளையும் பார்க்கவே இல்லை என சொல்லி விட்டு சுருதி தாமரை செல்வி காயினை திருடியவது வரை எப்படி தான் பேசுகிறார் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கு என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

பிரியங்கா தான் பெஸ்டீ

பிரியங்கா தான் பெஸ்டீ

பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா உங்களை கிட்ட கூட சேர்க்காத நிலையில், அழுது டிராமா பண்ணி அவரோட பழக ஆரம்பிச்சீங்களா என பேட்டியில் கேட்டதற்கு 11 வருஷம் இண்டஸ்ட்ரியை கட்டி ஆண்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அழுது தோழியாக ஆக்க முடியும் என்றால் இன்னமும் அதிகமாக அழுவேன் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். பிரியங்கா தான் பிக் பாஸ் வீட்டில் தனக்கு பிடித்தவர் என்றும் கூறியுள்ளார்.

மதுமிதா எனக்கு குழந்தை

மதுமிதா எனக்கு குழந்தை

எனக்கு 31 வயசுங்க.. என்னை விட மதுமிதா 2 வயசு பெரிய பொண்ணு. ஆனால், அவளை பார்த்தால் எனக்கு குழந்தை மாதிரி தான் தோணுது. நான் விவாகரத்து ஆனவன். இதுக்கு மேல மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வேனா எனக்கு தெரியவில்லை. எனக்கு மது மாதிரி ஒரு குழந்தை இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அந்த வீட்டில் அவள் என்னை டாடி என்று தான் அழைப்பாள் என்றும் பல ரகசியங்களை ஓப்பன் செய்துள்ளார்.

நிரூப்புக்கு வாய்ப்பு

நிரூப்புக்கு வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டு வந்த ஒரே ஆள் நிரூப் தான். நிச்சயம் இந்த சீசன் டைட்டிலை நிரூப் வெல்ல நிறைய சான்ஸ் இருக்கு. தேவையில்லாமல் பவரை யூஸ் பண்ண மாட்டான். டாஸ்க்கின் போது ஒட்டுமொத்த திறமையும் காட்டி விளையாடுவான். அவனுக்கு அந்த வீட்டில் நண்பன், பகைவன்னு யாருமே கிடையாது. அவன் ஃபோகஸ் ஃபுல்லா கேம் மேல தான் எனக் கூறியுள்ளார்.

சுருதி தான் வின்னர்

சுருதி தான் வின்னர்

ரன்னர் அப் யாரா வருவாங்க என்கிற கேள்விக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்கள் யாரும் வின்னராக வரவில்லை. அதனால், இந்த சீசனில் பெண் போட்டியாளரை வின்னராக்கும் வாய்ப்பும் இருக்கு என சொல்ல ஜோ மைக்கேல் லோகோவிலேயே பிங்க் தானே இருக்கு நிச்சயம் பெண் போட்டியாளர் தான் எனக் கூற என்னை பொறுத்த வரை சுருதி தான் டைட்டில் வின்னராக வருவார் என ரொம்பவே யோசித்து கூறிய அபிஷேக் நிச்சயம் பிரியங்காவுக்கு வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக கூறிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X