நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அபிஷேக் தான் காரணமா? என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா ஜோ மைக்கேலுக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த ஜோ மைக்கேல் தனியார் யூடியூப் சேனலில் பிக் பாஸ் குறித்த விமர்சனத்தை இந்த முறை ஷகிலாவின் மகள் மிலாவுடன் இணைந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், அபிஷேக் ராஜாவை அவர் பேட்டியெடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அபிஷேக் ராஜா ட்வீட்

அபிஷேக் ராஜா ட்வீட்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அபிஷேக் ராஜா வெளியிட்ட அறிக்கை ட்வீட் சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது. பிக் பாஸ் வீட்டில் கடைசி வரைக்கும் தான் உண்மையாக விளையாடியதாகவும், மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும் உள்ளே இருந்த போட்டியாளர்கள் அனைவரிடமும் ஒரு வித ஈக்வேஷன் தனக்கு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

ஓப்பன் பேட்டி

ஓப்பன் பேட்டி

ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலில் சினிமா விமர்சனங்களை சொல்லி வந்த சினிமா பையன் அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் இருந்து 3வது வாரத்திலேயே அதிரடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், ஜோ மைக்கேலுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. ஜோ மைக்கேல் ரசிகர்கள் கேட்க நினைத்த அத்தனை கேள்விகளையும் கேட்க தனக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்தார் அபிஷேக் ராஜா.

எதிர்பார்க்கல

எதிர்பார்க்கல

பிக் பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவீர்கள் என நினைச்சு பார்த்தீங்களா என கேட்டதற்கு நிச்சயம் எதிர்பார்க்கல எனக்கு தெரிந்த வரை நான் கேமை நல்லா தான் விளையாடினேன். கடைசி வரைக்கும் நான் நானாகத்தான் இருந்தேன் என்றார் உடனே நீங்க எதுவுமே பண்ணல நாங்க தான் வெளியே அனுப்பிட்டோமா என எதிர் கேள்வி கேட்டு அபிஷேக் ராஜாவை அட்டாக் செய்து விட்டார்.

நமீதா ஏன் வெளியேறினார்

நமீதா ஏன் வெளியேறினார்

நமீதா மாரிமுத்து வெளியேற்றம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. நமீதா மாரிமுத்து வெளியேறிய அன்னைக்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசிய அபிஷேக் ராஜா அன்னைக்கு வீடே இரண்டாகிடுச்சு அனைவரையும் காப்பாற்றி வெளியே அனுப்பவே ரொம்ப கஷ்டப்பட்டோம். நாடியாவை எல்லாம் கீரை கட்ட தூக்கிட்டு போய் போடுற மாதிரி வெளியே போட்டேன் என்றார்.

அவங்க சொல்லட்டும்

அவங்க சொல்லட்டும்

ஆனால், நமீதா மாரிமுத்துவுக்கு என்ன ஆச்சு என்றும் அங்கே நடந்த கலவரம் குறித்தும் அபிஷேக் ராஜா தெளிவாக சொல்லவில்லை. இந்த உலகத்துக்கு அவங்க முதல்ல எப்போ சொல்றாங்களோ சொல்லட்டும் அதற்கு பிறகு நான் அதை பத்தி தெளிவா சொல்றேன் என அபிஷேக் ராஜா கூறினார்.

அபிஷேக் காரணமா

அபிஷேக் காரணமா

தாமரை செல்விக்கும் நமீதா மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை தான் அவர் வெளியேற காரணம் என தகவல்கள் வெளியான நிலையில், நீங்க தான் காரணம் என சொல்கிறார்களே என ஜோ மைக்கேல் அபிஷேக்கிடம் போட்டு வாங்க அவங்க சொல்லட்டும் பிரதர் அப்புறம் நான் சொல்றேன் என மழுப்பி விட்டார். ஆனால், நமீதாவுக்கு என்ன நடந்தது என்பதை அவராகவே சொன்னால் தான் உண்மை தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X