இந்த சீசன் வனிதா விஜயகுமார் அபிஷேக் ராஜா தான்.. தாறுமாறான வைல்டு கார்டு என்ட்ரி.. ஷாக்கான தாமரை!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் 46 நாட்கள் ஆகியும் இன்னமும் எந்தவொரு வைல்டு கார்டு என்ட்ரியும் வரவில்லையே என நினைத்து ஆதங்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏன் தான் அதை எதிர்பார்த்தோமோ என்கிற அளவுக்கு அபிஷேக் ராஜாவின் என்ட்ரி அமைந்துள்ளது.
எப்படி நீங்க என்னை கழுவி ஊற்றினாலும் நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள அழைப்பு வந்தால் போவேன் என சமீபத்தில் அபிஷேக் ராஜா லைவ் வீடியோவில் பேசியிருந்த நிலையில், இன்றைய 3வது புரமோவில் வாத்தி கம்மிங் பாடலுடன் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பரிசு மழை
இந்த வாரம் லக்சரி டாஸ்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணாடியின் பிரதிபலிப்பாக நடித்து தங்களின் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் அடுத்தவர் மீது கொட்டித் தீர்த்து விட்டனர். அதற்கு கிடைத்த லக்சரி பட்ஜெட்டுக்கான பரிசாக பெரிய பரிசு மழையே போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

பெரிய டைஸ்
அபிநயை நிரூப் சகுனி என சொல்ல அவர் நிரூப்புக்கு நீ தான் நிஜ சகுனி என டைஸ் கொடுத்து சண்டை உருவான நிலையில், பெரிய டைஸை கொடுத்து இந்த பரிசுகளை பெறுவதற்காக பிக் பாஸ் கொடுத்த பக்காவான டாஸ்க் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்க்ரிப்டட் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

அபிஷேக் ராஜா என்ட்ரி
9ம் நம்பர் டைஸை உருட்டாமலே இருந்திருந்தால் அபிஷேக் ராஜா கடைசி வரைக்கும் அந்த பொட்டிக்குள் தான் இருந்திருப்பாரா? என்கிற கேள்வி அது எப்படி திமிங்கலம் கரெக்ட்டா 9ம் நம்பர் டைஸ் உருட்டப்பட்டது என்றும் எவ்வளவோ பண்றாங்க.. இதை பண்ண மாட்டாங்களா என்றும் அபிஷேக் ராஜா 9ம் நம்பர் போட்ட் பொட்டியில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக வந்ததை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஷாக்கான தாமரை
இமான் அண்ணாச்சி ஒவ்வொரு பொட்டியாக திறக்க சாக்லேட், ஸ்வீட்ஸ் உள்ளிட்ட சாப்பிடும் பொருட்கள் பரிசாக கிடைக்க 9ம் நம்பர் பொட்டியை திறக்கும் போது அபிஷேக் ராஜா சர்ப்ரைஸாக வெளியே வந்ததை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் சர்ப்ரைஸ் ஆன நிலையில், தாமரை செல்வி மட்டும் ஏன் அப்படி ஷாக்கானார் என அவரது ரியாக்ஷனை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த சீசன் வனிதா
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் வனிதா விஜயகுமார் இதே போலத்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அதிரடி என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார். அபிஷேக் ராஜா ஏற்கனவே தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பே இல்லாமல் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறிய நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரியாக கலந்து கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் வேற எந்த ஆடும் சிக்கலையா பிக் பாஸ் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

முகத்தை காட்டல
அபிஷேக் ராஜா தான் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் புரமோவில் அவரது முகத்தை காட்டவில்லை. தாமரை செல்வி, பிரியங்காவின் ரியாக்ஷனை எல்லாம் வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக அபிஷேக் ராஜா தான் வந்திருப்பார் என்று கெஸ் செய்து வருகின்றனர். இன்று இரவு எபிசோடில் வேற ஏதாவது ட்விஸ்ட் இருக்குமா? இல்லை அபிஷேக் தான் ரீ என்ட்ரியா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











