பத்தாயிரம் ராஜா இருந்தாலும்.. ராணி நீங்க தான்.. ரம்யா கிருஷ்ணனுக்கு அப்படியொரு ஐஸ் வைத்த அபிஷேக்!
சென்னை: வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என சும்மாவா சொன்னாங்க.. ரம்யா கிருஷ்ணன் வந்த உடனே அவங்களுக்கு அப்படியொரு ஐஸ் வைத்து அப்படியே ஐக்கியமாகி விட்டார் அபிஷேக்.
வீக்கெண்ட் எபிசோடு வந்தாலே நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அபிஷேக் இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் வந்ததும் ஒரே கவிதையாக பொழிந்து தள்ளி அவரை அசந்து போக செய்து விட்டார்.
அடுத்த வாரம் போட்டியாளர்கள் பலர் அவரை நாமினேட் செய்வார்களா? அல்லது தலைவராகி தப்பித்து விடுவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமலுக்கு கொரோனா
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமெரிக்கா போனாலும் டான்னு பிக் பாஸ்க்கு வந்து விடுவேன். கடமை தவறமாட்டேன் எனக் கூறிய கமல் சாருக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று பரவி இந்த வாரம் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.

புது ஹோஸ்ட்
அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த வாரம் முதல் அவர் வரும் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். கண்களை கொள்ளை கொள்ளும் கண்ணாடி சேலை அணிந்து ரம்யா கிருஷ்ணன் கலக்கலாக ஒருவித பவ்யமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை அமைதியாக ஆரம்பித்துள்ளார்.

அபிஷேக் ராஜா ஐஸ்
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவர் பற்றிய கருத்தை ரம்யா கிருஷ்ணன் எடுத்து வைத்து வந்த நிலையில், அபிஷேக் ராஜா பற்றி அவர் பேச வருவதற்கு முன் முந்திக் கொண்டு எப்போதும் போல ரம்யா கிருஷ்ணனுக்கு ஐஸ் வைப்பது போல ஒரு ஐட்டத்தை எடுத்து விட்டார் பாருங்கள்.. அவங்களே ஆடிப் போய்ட்டாங்க!

பத்தாயிரம் ராஜா இருந்தாலும்
ஒரு நாட்டில் அரசன் இல்லை என்றால் அந்த நாட்டின் ராணிக்கு முடி சூடுவார்கள். ஆனால், 10 ஆயிரம் ராஜா இருந்தாலும் அங்கேயும் நீங்க தான் மேடம் குயின் என ராஜமாதாவுக்கு மழைக் காலத்தில் இப்படியொரு ஐஸ் வைப்பார் அபிஷேக் ராஜா என ரம்யா கிருஷ்ணனே எதிர்பார்க்கவில்லை. அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பயங்கரமாக சிரித்து விட்டார் ரம்யா கிருஷ்ணன்.

பிங்க் லோகோ
நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி மற்றும் இந்த வாரம் ஐக்கி பெர்ரி என தொடர்ந்து பெண் போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வருகின்றனர். அபிஷேக் வெளியே போய்விட்டு உள்ளே வந்துவிட்டார். புதிதாக வந்த வைல்டு கார்டுகளும் ஆண் போட்டியாளர்கள் தான். இந்நிலையில், இந்த சீசன் பிங்க் லோகோவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ரம்யா கிருஷ்ணனின் ஹோஸ்ட் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











