கணவருக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்த மஞ்சு வாரியர்... விரிசலின் பரபரப்புப் பின்னணி!!

By Sudha

திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியருக்கும், அவரது கணவர் நடிகர் திலீப்புக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட ஒரு கருக்கலைப்பே காரணம் என்று தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

கணவருக்குத் தெரியாமல் அவர் கருக்கலைப்பு செய்ததால்தான் திலீப் கடும் கோபமடைந்து மஞ்சு வாரியருடன் மன வேறுபாடு கொண்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன.

தனக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்த காரணத்தால்தான் மஞ்சு வாரியரிடம் திலீப் மோதியதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன.

அழகு நடிகை மஞ்சு வாரியர்

அழகு நடிகை மஞ்சு வாரியர்

மலையாளத் திரையுலகம் கண்ட அழகிய, அருமையான நடிகைகளில் மஞ்சு வாரியரும் ஒருவர்.

காதல் மணம்

காதல் மணம்

நடிகர் திலீப்பும், மஞ்சு வாரியரும் காதல் மணம் புரிந்தவர்கள் ஆவர். திருமணத்திற்குப் பின்னர் நடிக்கவில்லை மஞ்சு. இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

திடீர் பிரிவு

திடீர் பிரிவு

அத்தனை பேரின் கண் பட சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளிடையே பெரும் விரிசல் ஏற்பட்டு இருவரும் தனித் தனியாக தற்போது வாழும் நிலைக்குப் போய் விட்டனர்.

ஏன் இந்தப் பிரிவு?

ஏன் இந்தப் பிரிவு?

இந்தப் பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராமல் இருந்தது. தற்போது பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.

குழந்தையை விரும்பி திலீப்

குழந்தையை விரும்பி திலீப்

திலீப்புக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் இன்னொரு குழந்தையை மஞ்சு விரும்பவில்லை.

மீண்டும் கருத்தரித்தார் மஞ்சு

மீண்டும் கருத்தரித்தார் மஞ்சு

இருப்பினும் திலீப் தொடர்ந்து குழந்தை வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதால், மஞ்சு மீண்டும் கருத்தரித்தார்.

கலைத்தார் மஞ்சு

கலைத்தார் மஞ்சு

ஆனால் இக்குழந்தையை மஞ்சு விரும்பவில்லையாம். இதனால் கணவருக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாக கருவைக் கலைத்து விட்டாராம்.

நடிக்கவும் அனுமதி மறுப்பு

நடிக்கவும் அனுமதி மறுப்பு

அதேசமயம், மீண்டும் நடிக்க ஆசைப்பட்டார் மஞ்சு. அதற்கும் திலீப் தடை போட்டார். இப்படி அடுத்தடுத்து இருவருக்குள்ளும் கசப்புகள் உருவாகவே இப்போது பிரிவு வரை வந்து விட்டது.

இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரப் பிரிவா என்பது அந்தக் குருவாயூரப்பனுக்கே வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X