ஹேப்பி நியூ இயரில் இளைய மகன் ஆப்ராமை அறிமுகப்படுத்தும் ஷாருக்கான்
மும்பை: ஹேப்பி நியூ இயர் படத்தில் ஷாருக்கானின் மனைவி கௌரியும் இளைய மகன் ஆப்ராமும் ஒரு காட்சியில் வருகிறார்களாம்.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், போமன் இரானி, தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ஹேப்பி நியூ இயர். படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.
ஹேப்பி நியூ இயரில் ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.

கௌரி கான்
ஹேப்பி நியூ இயரில் ஷாருக்கானின் மனைவி கௌரி ஒரு காட்சியில் வருகிறார். முன்னதாக அவர் ஃபரான் கான் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்திலும் ஒரு காட்சியில் வந்துள்ளார்.

ஆப்ராம்
ஹேப்பி நியூ இயரில் கௌரி கான் மட்டும் அல்ல அவரின் இளைய மகன் ஆப்ராமும் ஒரு காட்சியில் வருகிறாராம்.

ஆர்யன் கான்
ஷாருக்கானின் மூத்த மகனான ஆர்யன் சிறுவனாக இருக்கையில் கபி குஷி கபி கம் படத்தில் குட்டி ஷாருக்காக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்
ஷாருக்கான் ஆப்ராமின் புகைப்படத்தை முதலில் ட்விட்டரில் தான் வெளியிட்டார். தற்போது மகனை படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.


Click it and Unblock the Notifications











