Absolute misuse of power.. தளபதி படம் எப்போ ரிலீஸோ அப்போ தியேட்டர் பக்கம் போறேன்.. அஜய் ஞானமுத்து ஆதங்கம்!
சென்னை: டிமான்ட்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு எதிராக அநீதி நடந்துள்ளதாக கொந்தளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ரவி மோகன், கன்னட சினிமாவில் இருந்து ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட வெகு சிலரே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இன்று எப்படியாவது ஜன நாயகன் படத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிடும் என தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவும் பெரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடைசியில் தீர்ப்பையே ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.

தணிக்கை குழு தங்களுக்கு 4 வாரங்களாவது டைம் வேண்டும் எனக் கேட்டு வழக்கை எந்தளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவுக்கு சரியான காரணங்களையும் வாதங்களையும் முன் வைக்காத நிலையில், இழுத்தடிப்பதாக ரசிகர்கள் கொதித்துள்ள நிலையில், விஜய்க்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து குரல் கொடுத்துள்ளார்.
கடுப்பில் கேவிஎன் நிறுவனம்: சுமார் 500 கோடி அளவுக்கு முதலீடு போட்டு ஜன நாயகன் படத்தை எடுத்துள்ளோம். உரிய நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் டிசம்பர் மாதமே தணிக்கைக்கு அனுப்பப்பட்ட படத்திற்கு அவர்கள் சொன்ன அனைத்து கட்களுக்கும் மியூட்களுக்கும் ஒப்புக் கொண்ட நிலையில், கடைசி நேரத்தில் மறு சீராய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சொல்வது நியாயமே இல்லை என கேவிஎன் தீர்ப்பு நீதிமன்றத்தில் வாதிட்டாலும் உடனடியாக தீர்ப்பை வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா மறுத்துவிட்டார். ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி படம் வரக்கூடாதா? உயர்நீதிமன்ற நீதிபதி கேட்ட நிலையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் தான் ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், கடுப்பில் உள்ள கேவிஎன் நிறுவனம் ஜன நாயகன் புரொமோஷனை நிறுத்திவிட்டு டாக்ஸிக் பட புரொமோஷனை ஆரம்பித்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகம்: "Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples' efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan" என இயக்குநர் அஜய் ஞானமுத்து அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. தனி ஒருவர் மட்டுமே ஒரு படத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு பின்னாள் 100 பேரின் உழைப்பும் வாழ்க்கையும் உள்ளது. எப்போது தளபதி படம் வருதோ அப்போ தான் தியேட்டருக்குப் போவேன் என அஜய் ஞானமுத்து தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











