கில்லர் படப்பிடிப்பில் விபத்து.. SJ சூர்யா படுகாயம்.. அச்சச்சோ மனுஷன் இப்போ எப்படி இருக்காரு?
சென்னை: இயக்குநர், நடிகர் என தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த SJ சூர்யா 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தது கில்லர் படத்தில் தான். இந்த படத்தின் கதை, திரைக்கதையை அவரே உருவாக்கி, படத்தை இயக்கி நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர்களை படக்குழு சார்பில் அவர் வெளியிட்டிருந்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சண்டைக் காட்சி படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் SJ சூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், தையல் போட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல், அடுத்த 15 நாட்களுக்கு முழுவதும் ஓய்வு எடுக்கும்படி, மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் படப்பிடிப்பு தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கில்லர் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதும், அதில் SJ சூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் கோலிவுட் வட்டாரத்தை கொஞ்சம் அதிர்ச்சி ஆக்கி உள்ளது. பலரும் பரபரப்பாக இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.
SJ சூர்யா தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, அதன் பின்னர் அஜித்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் மாபெரும் வெற்றியுடன் தனது இயக்குநர் கெரியரை தொடங்கினார். அதன் பின்னர் விஜயை வைத்து குஷி என்ற படத்தைக் கொடுத்தார். SJ சூர்யா என்றாலே கொஞ்சம் விவகாரமான கதைகளை படம் ஆக்குவார் என்ற பேச்சு இப்போதும் தமிழ் சினிமா வட்டாரத்தில் உள்ளது.

வில்லாதி வில்லன்: 2015 ஆம் ஆண்டில் இசை படத்திற்கு பின்னர் இவர் கடந்த 10 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்கவில்லை. மாறாக செம பிஸியான நடிகராக மாறிவிட்டார். அதுவும் இன்றைய தமிழ் சினிமா மட்டும் இல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் வில்லாதி வில்லன் என்றால் அது SJ சூர்யா தான் என்று இயக்குநர்கள் கமிட் ஆகும் அளவுக்கு ஒரு நடிகராக வெற்றியின் உச்சத்திற்கு உயர்ந்து கொண்டே இருந்தார்.
கில்லர்: இப்படி இருக்கும்போது, தான் எழுதிய கில்லர் படத்தை இயக்கி நடிப்போம் என்ற முடிவுக்கு வந்தார். இது தொடர்பாக அறிவிப்பு போஸ்டர்களை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். படத்தின் பெயர், இவர் டிசைன் செய்த போஸ்டர், அதில் இவரது லுக் ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் போது ஏற்பட்ட விபத்தில் தான் SJ சூர்யா படுகாயம் அடைந்துள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











