Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேனி அருகே கோர விபத்து.. கேமரா மேன் பலி.. 'கருப்பன் குசும்புக்காரன்' டயலாக் நடிகர் படுகாயம்!
தேனி: தேனி அருகே சினிமா குழுவினர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கேமராமேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரபல நடிகர் படுகாயமடைந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், பருத்திவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தவசி. 59 வயதான இவர், தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்திருப்பார். அந்தப்படத்தில் சாமியாடியாக நடித்த தவசி, கருப்பன் குசும்புக்காரன் என்று கூறிய டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
பிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்
டிவி சீரியல்
இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பேருதவியாக இருக்கிறது அந்த டயலாக். இந்நிலையில் தேனி மாவட்டம் கோம்பை மலையடிவார பகுதியில் டிவி சீரியலுக்கான ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.
நேற்று படப்பிடிப்பு
இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமரா மேன்கள் உள்ளிட்டோர் அப்பகுதியில் தங்கியிருந்தனர். நேற்று படப்பிடிப்பு நடைபெற இருந்ததாக தெரிகிறது.
காரை ஓட்டிய நடிகர்
இதையடுத்து அவர்கள் உத்தமபாளையம் நோக்கி கார் மற்றும் கேரவனில் சென்று கொண்டிருந்தனர். இதில் காரை நடிகர் தவசி ஓட்டி வந்தார். அவருடன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கேமராமேன் சிவா வந்துள்ளார். மற்றவர்கள் ‘கேரவன்' வாகனத்தில் பின்னால் வந்தனர்.
அப்பளம் போல் நொறுங்கிய கார்
கோம்பை இரட்டை புளியமரம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
கேமரா மேன் பலி
இதில் காரில் வந்த கேமரா மேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடிகர் தவசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு
மேலும் பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ச்சி
விபத்தில் பலியான சிவா, நடிகர்கள் விஜய், அஜித், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த படங்களில் கேமராமேனாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் கேமராமேன் உயிரிழந்த சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.