twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி 63 படப்பிடிப்பில் திடீர் விபத்து.. ஓடிச் சென்று ரசிகர்களை காப்பாற்றிய விஜய்.. வைரலாகும் வீடியோ

    படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் ரசிகர்களைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

    |

    Recommended Video

    ரசிகர்களை காப்பாற்றிய விஜய்.. வைரலாகும் வீடியோ

    சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக தடுப்பு வேலி உடைந்து விபத்து ஏற்பட்டது. நடிகர் விஜய் ஓடிச் சென்று ரசிகர்களைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

    சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கதில் புதிய படம் ஒன்றில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தினை ரசிகர்கள் தளபதி 63 எனக் குறிப்பிட்டு வருகின்றன. விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    Accident in Thalapathy 63 movie shooting spot

    இந்நிலையில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க விஜய் ரசிகர்கள் பலர் அங்கு கூடி இருந்தனர். இதையறிந்த விஜய் ரசிகர்களைக் காண அங்கு வந்தார். விஜயின் வருகையால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் தடுப்பு வேலியைத் தாண்டி வர முயற்சித்துள்ளனர்.

    இதில் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் மீது விழுந்தது. இதைக் கண்டு பதறிப் போன விஜய், ரசிகர்களைக் காப்பாற்ற ஓடிச் சென்றார். விஜய்யுடன் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் சிலரும் ஓடிச் சென்று ரசிகர்களைக் காப்பாற்றினர். பின்னர், அந்த வேலி கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தனர்.

    இந்த நேரத்தில் கவர்ச்சி போட்டோ தேவையா?: அமலா பாலை விளாசிய நெட்டிசன்ஸ் இந்த நேரத்தில் கவர்ச்சி போட்டோ தேவையா?: அமலா பாலை விளாசிய நெட்டிசன்ஸ்

    பின்னர் ரசிகர்கள் யாருக்கும் காயம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின், விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவங்களை அங்கிருந்த ரசிகர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Actor Vijay saved so many fans from a accident in the sets of Thalapathy 63 movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X