கைகொடுக்குமா நியூமராலாஜி? அந்த பிரச்னைக்காகத்தான் பெயர் மாறினாரா ஹீரோ?
கொச்சி: பிரபல ஹீரோ, தனது பெயரை நியூமராலஜிபடி மாற்றி அமைத்துள்ளார்.
பிரபல மலையாள ஹீரோ திலீப். தமிழில் ராஜ்ஜியம் படத்தில் நடித்துள்ளார். இவரும் மலையாள நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

வழக்கு
மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மை சான்டா
இந்நிலையில் அவர் மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான, மை சான்டா படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அவர் இரண்டு வேடங்களில் நடிக்கும், கேசு ஈ வீடிண்டே நாதன் என்ற படத்தின் அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

நம்ப முடியாத லுக்
இதில் நடிகர் திலீப்பின் தோற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். யாரும் நம்ப முடியாத தோற்றத்தில் அவர் இருந்தார். வயதான லுக்கில் இருக்கும் திலீப், இந்தப் படத்தில் 60 வயதுகாரராக நடிக்கிறார். அவர் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார். நதிர் ஷா இயக்குகிறார்.

நியூமராலஜி படி
இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து தனது பெயரை நியூமராலஜி படி மாற்றி வைத்துள்ளார். அதாவது Dileep என்ற தனது பெயரை Dilieep ஆக்கியிருக்கிறார். இவரது உண்மையான பெயர் கோபாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பெயர் மாற்றமாவது நடிகை வழக்கில் இருந்து அவரை விடுவிக்குமா பார்ப்போம் என்கிறார்கள் மலையாள ரசிகர்கள். இதற்காகத்தான் அவர் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











