கல்யாணம் ஆகலையாம்.. லவ்வும் செட் ஆகலையாம்.. வைரலாகும் வனிதாவின் வீடியோ!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானார் வனிதா. நெகட்டிவ் ரீச் என்ற போதும் வனிதாவுக்கு பட வாய்ப்புகளும் சின்னத்திரை நிகழ்ச்சிகளும் குவிந்து வருகிறது.
நிகழ்ச்சிகள் மூலம் ஒரு பக்கம் பிரபலமானாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமாகி வருகிறார்.

திருமணம் விமர்சனம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்தார் நடிகை வனிதா விஜயகுமார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் வனிதாவின் திருமணம் விமர்சனத்துக்குள்ளானது.

பிரிந்த வனிதா
இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத வனிதா தனது திருமணத்தை விமர்சித்தவர்களை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார். ஆனால் அடுத்த 4 மாதங்களிலேயே பீட்டர் பாலை பிரிந்தார் வனிதா.

மதிப்பெண்களை குறைத்ததால்
கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. அங்கு நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன் வனிதாவின் நடனத்துக்கு மதிப்பெண்களை குறைத்து வழங்கியதால் அவருடன் நான்சிங் ஏற்பட்டதாக தெரிகிறது.

சமூக வலைதளங்களில் ஜாலி
இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் வனிதா. இந்த விஷயம் ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்க சமூக வலைதளங்களில் எப்போதும் போல வீடியோ வெளியிடுவது, போட்டோக்களை வெளியிடுவது என இருந்து வருகிறார் வனிதா.

கருத்தம்மா நடிகையுடன்
அந்த வகையில் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோக்களை வெளியிட்ட வனிதா, கருத்தம்மா நடிகை ராஜஸ்ரீயுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்யாணம் ஆகல
அதில் தெறி படத்தில் விஜய்யும் சமந்தாவும் பேசிக்கொள்ளும் டயலாக்கை வைத்து இருவரும் டப்ஸ் மேஷ் செய்துள்ளனர். ராஜஸ்ரீ வனிதாவிடம் கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க அதற்கு வனிதா இல்லை என்கிறார்.

3 தடவை ஆயிடுச்சே
அடுத்து யாராச்சும் லவ்வு என்று கேட்கிறார் ராஜஸ்ரீ அதற்கு செட் ஆகல என பதில் சொல்கிறார் வனிதா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதான் 3 தடவை கல்யாணம் ஆயிடுச்சே என கலாய்த்துள்ளனர்.

நெட்டிசன்ஸ் கோரிக்கை
அதேநேரத்தில் பலரும் வனிதாவை புகழ்ந்து டிவிட்டியுள்ளனர். இதுபோன்று பல வீடியோக்களை வனிதா வெளியிட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனிதாவின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











