காஜல் நடித்த காட்சிகள் நீக்கம்.. ஆச்சார்யா இயக்குநரின் திடீர் முடிவு..ஏன் என்ன ஆச்சு !

சென்னை : ஆச்சார்யா படத்திலிருந்து காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை இயக்குநர் அதிரடியாக நீக்கி உள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஆச்சார்யா. இப்படம் ஏப்ரல் 29 ம் தேதி திரைக்கு வருகிறது.

ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே , சோ னு சூட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆச்சார்யா

ஆச்சார்யா

140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆச்சார்யா திரைப்படத்தை கொரடலா சிவா இயக்கியுள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு புயல் வேகத்தில் தொடங்கி டிசம்பரில் முடிந்தது.

29ந் தேதி ரிலீஸ்

29ந் தேதி ரிலீஸ்

இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிலிருந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ஜனவரியில் வெளியாக இருந்த ஆச்சாரியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இத்திரைப்படம் ஏப்ரல் 29ந் தேதி வெளியாக உள்ளது.

காட்சிகள் நீக்கம்

காட்சிகள் நீக்கம்

இந்த நிலையில், படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கொர்டலா சிவாவிடம் செய்தியாளர்கள் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இயக்குநர், ஆச்சார்யா படத்தில் காஜலின் கதாபாத்திரம் ரொம்ப ஜாலியானது, இதனால்,அவரை நடிக்க வைத்து ஷூட்டிங்கை முடித்து விட்டோம்

சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை

சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை

ஆனால், ரஷ் பார்த்தபோது ஒரு முன்னணி நடிகையை, இப்படி ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வைத்தது உறுத்தலாக இருந்தது. இதுபற்றி, காஜலிடம் கலந்து பேசினோம் அவர் காட்சியை நீக்க எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால், படத்திலிருந்து காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறினார். இந்தப் படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு மட்டும் ஜோடியாக பூஜா ஹெக்டே உள்ளார். சிரஞ்சீவிக்கு ஜோடி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜல்

காஜல்

நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். மேலும், நீல் பிறந்த தருணத்தை நினைத்து பெருமைப்படுவதாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X