Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பெண்ணின் பெருமை பேசும் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு“.. ஃபர்ஸ்ட் லுக் அவுட்!
சென்னை : ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
நடிகை அக்ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" தலைப்பை வெளியிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து பேசுகையில் எங்கள் படத்தின் "அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு" தலைப்பை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது எங்களுக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. நாங்கள் கேட்டுக்கொண்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக எங்கள் படத்தலைப்பை வெளியிட்டு தந்த விஜய் சேதுபதியின் எளிமையான பண்பு, எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு எங்கள் மனம்கனிந்த நன்றி என்று தெரிவித்து உள்ளார்
எது நல்லவள் ஆக்குகிறது
சமூகத்தை பொறுத்தவரை "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு " எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது. எங்கள் படம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதைத்தாண்டி கதைதளம் பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதை அறிந்துகொண்டால் தான் அது சுவாரஸ்யமாக இருக்கும்.
பாட்டி கதாபாத்திரம்
தென்னிந்திய டிஜிட்டல் தளத்தில், தங்களது தரமான தயாரிப்புகள் மூலம் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது ட்ரெண்ட் லவுட் (Trend Loud ). தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியாக திரைப்படத்துறையில் கால் பதித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறது. அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாடகி உஷா உதுப் அவருக்கு பாட்டியாக நடிக்கிறார்.
பலம கொண்ட கூட்டணி
பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஷ்ரேயா தேவ் ட்யூப், படத்தொகுப்பு கீர்த்தனா முரளி, பாடல்கள் - மதன் கார்கி என பலம் கொண்ட ஒரு கூட்டணியாக தான் இந்த படம் இருக்கிறது.