அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு படங்கள்.. ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

By Manjula

சென்னை: 'அச்சம் என்பது மடமையடா' ஜூலை 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பின் சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், தாமரை கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.

தற்போது இப்படத்தின் ஆடியோ மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற பிளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பின் சிம்பு-கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், முக்கிய வேடத்தில் டேனியல் பாலாஜியும் நடித்துள்ளனர்.

தள்ளிப் போகாதே

தள்ளிப் போகாதே

புத்தாண்டு தினத்தில் இப்படத்தின் தள்ளிப் போகாதே சிங்கிள் டிராக்கை படக்குழு வெளியிட்டது.ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்பாடலை இதுவரை 1 கோடியே 30 லட்சம் பேர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஷோகாளி பாடலின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 17ம் தேதியும், படம் ஜூலை 15ம் தேதியும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ராசாளி என்ற பாடலை வருகின்ற 26ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளனர்.

டிரிபிள் ட்ரீட்

டிரிபிள் ட்ரீட்

சிம்பு ரசிகர்கள் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'இது நம்ம ஆளு' வருகின்ற 27ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 'அச்சம் என்பது மடமையடா பாடல்கள்' மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருப்பதால் சிம்பு ரசிகர்கள் தற்போது டிரிபிள் சந்தோஷத்தில் திளைத்து வருகின்றனர். இதனால் #Simbu,#AchchamYenbadhuMadamaiyada, #Rasaali போன்ற ஹெஷ்டேக்குகள் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டடித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X