'அச்சு'விண்டே சினிமா அறிமுகம்...!
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் மலையாளத் திரைப்படம் ஒன்றில் முகம் காட்டியுள்ளார். மக்களுக்கு அறிவுரை கூறிப் பேசும் காட்சியில் அவர் தோன்றியுள்ளார்.
அட் ஒன்ஸ் என்ற மலையாளப் படத்தில்தான் அச்சுதானந்தன் தோன்றியுள்ளார்.
இந்தப் படத்தில் அவர் பேசும் காட்சிகளை அவரது திருவனந்தபுரம் வீட்டில் வைத்துப் படமாக்கியுள்ளனர்.

மக்கள் தலைவர்
கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனுக்கு தற்போதும் கேரளாவில் நல்ல மவுசு உள்ளது.

நக்கல் நையாண்டிப் பேச்சு
பொதுக் கூட்ட மேடைகளில் தனது அரசியல் எதிரிகளை அவர் நையாண்டி செய்து கேலியும், கிண்டலுமாக பேசுவதை கேட்க பல ஆயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம்.

சினிமாவில் அச்சுதானந்தன்
அச்சுதானந்தனின் இந்த மக்கள் செல்வாக்கை தனது பயன்படுத்த புதுமுக டைரக்டரான செய்யது உஸ்மான் தீர்மானித்தார். இவர் இயக்கும் அட்ஓன்ஸ் என்ற மலையாள படத்தில் அச்சுதானந்தன் நடிக்க வைக்க பலமுறை செய்யது உஸ்மான் முயன்றார்.

வேண்டா...
பல்வேறு கொடு்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறி பேசும் காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியும், தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என் அச்சுதானந்தன் மறுத்து வந்தார்.

கடும் முயற்சிக்குப் பின் சம்மதம்
ஆனாலும் செய்யது உஸ்மானின் கடும் முயற்சியால் படத்தில் நடிக்க அச்சுதானந்தன் சம்மதித்தார். இதையடுத்து மக்களுக்கு அறிவுரை கூறி அச்சுதானந்தன் பேசுவது போன்ற காட்சிகள் திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து படமாக்கப்பட்டது.

ஒரே டேக்கில்.. ஓ.கே.
ஓரே டேக்கில் தனது சீனில் நடித்து அச்சுதானந்தன் சினிமாவிலும் தனது முத்திரையை பதித்தார்.


Click it and Unblock the Notifications











