ஏதோ சொல்லவறீங்க.. கலாய்த்த இயக்குனர்.. பீல் பண்ண சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழில் முன்னணி நடிகராக பல படங்களில் தற்போது நடித்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் செய்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு அவர் அப்லோட் செய்த இந்த போட்டோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் இயக்குனர் நெல்சன் அவரை கலாய்த்துள்ளார்.

 ஹாண்ட்சம் லுக்

ஹாண்ட்சம் லுக்

தனது படங்களில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன் வெகு நாட்களுக்கு பிறகு போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிம்பிள் அண்ட் எலகண்டாக இருந்தார் லைட் ஆரஞ்சு கலர் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் உடுத்தி கையில் காப்புடன் செம ஸ்மார்ட்டாக அந்த போட்டோவில் போஸ் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரை ரசித்தும் பாராட்டி வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் நண்பரும் இயக்குனருமான நெல்சன் இவரைக் கலாய்த்துள்ளது இணையத்தில் பெரும் சிரிப்பலையை உண்டாக்கியுள்ளது.

 கலாய்த்த இயக்குனர் நெல்சன்

கலாய்த்த இயக்குனர் நெல்சன்

சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தனது போட்டோ ஒன்றை சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதில் "அது ஏதோ த்ரோபேக்காமே, ஆமா அது தான்.. போற போக்குல ஒரு போட்டோ ஷூட்" என அந்த பதிவின் கீழ் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த அவரின் நண்பன் நெல்சன் "வாவ் வாட்ட மேன்?? ஏதோ சொல்ல வரீங்க.. போட்டோ அருமை" என தனது பாணியில் சிவகார்த்திகேயனை கலாய்த்தும் பாராட்டியும் உள்ளார். நெல்சன் கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார் இதன் பிரத்தியோக போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 காமெடிக்கு பஞ்சம் இல்லை

காமெடிக்கு பஞ்சம் இல்லை

மேலும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி படங்களிலும் ஆக்சன் படங்களிலும் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது நேற்று இன்று நாளை என்ற படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கும் அயலான் என்ற சயின்ஸ் பிக்சன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துவருகிறார் மேலும் யோகிபாபு இந்த டீமில் இணைவதால் காமெடிக்கு பஞ்சம் இல்லை என்ன புரிகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் யோகிபாபு சேர்ந்து செய்த காமெடி அட்டூழியங்கள் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த வேளையில் அந்த பார்முலா இதிலும் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நானும் ரவுடிதான் பட புகழ் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான விக்னேஷ் சிவன் தற்போது "காத்துவாக்குல இரண்டு காதல்" என்ற படத்தை விஜய்சேதுபதியை வைத்து இயக்கி வரும் நிலையில் இவரின் அடுத்த படம் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் திரை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல அறிமுக இயக்குனர்களை வைத்து நல்ல படைப்புகளை தொடர்ந்து தயாரித்து கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X