வாய்ப்புக்காக படுக்கை: ரூ.32 கோடி நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ஹாலிவுட் நடிகை டோமினிக் ஹ்யூயட்.
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது இதுவரை 50 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை டோமினிக் ஹ்யூயட் வெயின்ஸ்டீன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஹ்யூயட் கூறியதாவது,

வாய்ப்பு
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் பெனின்சுலா ஹோட்டல் பாரில் வெயின்ஸ்டீனை சந்தித்தேன். நடிக்க வாய்ப்பு தருவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் வாய்ப்பு தொடர்பாக பேச தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறை
ஹோட்டல் அறைக்குள் சென்றதும் வெயின்ஸ்டீன் பாத்ரூமுக்கு சென்று வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வந்து தனக்கு மசாஜ் செய்யச் சொன்னார். வேறு வழியில்லாமல் செய்தேன்.

தொல்லை
வெயின்ஸ்டீன் சிறிது நேரம் கழித்து ஓரல் செக்ஸ் செய்யட்டுமா என்று கேட்டார். அவரிடம் முடியாது என்று யார் தெரிவித்தாலும் பிடிக்காது. அவர் ஓரல் செக்ஸ் செய்தார்.

வெயின்ஸ்டீன்
வெயின்ஸ்டீன் எனக்கு ஓரல் செக்ஸ் செய்துவிட்டு என் கண் முன்பே சுய இன்பம் அனுபவித்தார். இந்த கொடுமையை அடுத்து அவர் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

செயற்கை
நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் நான் உன் மார்பகங்களை பார்க்க வேண்டும் என்றார் வெயின்ஸ்டீன். இயற்கையான மார்பகங்கள் தான் நல்லது என்று அவர் தெரிவித்தார்.

நிறுவனம்
வெயின்ஸ்டீன் மீதும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீதும் பாலியல் வழக்கு தொடர்ந்துள்ளேன். வெயின்ஸ்டீன் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் தெரிந்தும் அவரது நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அமைதியாக இருப்பதால் அவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார் ஹ்யூயட். ரூ. 32 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் ஹ்யூயட்.


Click it and Unblock the Notifications











