Dushara Vijayan: வேட்டையன் படத்துல வெயிட்டான ரோல்தான்.. ரஜினியோட எனர்ஜி இருக்கே.. துஷாரா விஜயன் ஓபன்!
சென்னை: நடிகை துஷாரா விஜயனுக்கு தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது என்ற அடுத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது தனுசுடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன் மற்றும் விக்ரமுடன் வீர தீர சூரன் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதில் ராயன் படம் இம்மாதம் 26ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் துஷாரா விஜயன் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வரும் அவர் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளார்.

நடிகை துஷாரா விஜயன்: சார்பட்டா பரம்பரை படம் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய அறிமுத்தை பெற்றவர் துஷாரா விஜயன். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் வெளியான போதை ஏறி புத்தி மாறி படத்தில் இவர் நடித்து என்ட்ரி கொடுத்த போதிலும் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் ஜோடியாக மாரியம்மா என்ற இவரது கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்திலேயே நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துணிச்சலான பெண் கேரக்டரில் நடித்து அப்ளாசை அள்ளினார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது ரஜினியின் வேட்டையன், தனுஷின் ராயன் மற்றும் விக்ரமின் வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ராயன் படம்: இதில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா நடித்துள்ளார். இதுகுறித்து வருத்தம் இல்லை என்று தனது பேட்டியொன்றில் கூறியுள்ள துஷாரா விஜயன், அடுத்ததாக ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக துஷாரா விஜயன் கூறியுள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்றுவரும் துஷாரா விஜயன் அதிகமான பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
ரஜினியுடன் இணைந்து நடித்த துஷாரா: துஷாரா விஜயன் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்திலும் நடித்துள்ள நிலையில், அந்தப் படத்திலும் தனக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள துஷாரா விஜயன், படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியின் எனர்ஜி தன்னை மிகப்பெரிய அளவில் ஆச்சர்யப்படுத்தியதாகவும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேட்டையன் படம்: வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக துஷாரா விஜயன் கூறியுள்ள நிலையில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











